
ராம் அண்ட் லீலா திரை கதையை இயக்குனர் குடும்பத்தோடும் இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் படியான திரைக்கதை அமைப்பு அதில் குடும்ப உறவு, நட்பு,காதலிக்கு இருக்கும் பிரச்சினை என குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கக் கூடிய படமாக கொடுத்துள்ளார் திரைக்கதைக்கு தங்களது நடிப்பின் மூலம் அனைவரும் திரையில் காண்கோரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர்.
நாயகனுக்கு நல்ல வேலை இருந்தும் பல பெண்கள் நிராகரிக்கிறார்கள் ஆகையால் திருமணம் ஆகாத சோகத்தில் உள்ள நாயகன் ராம் என்கிற ரகு (ரியோ ராஜ்), குடும்பத்தில் அம்மாவிற்கு செல்ல பிள்ளையாகவும் அனைவரின் அன்பிற்கும் இணக்கமான நபராக உள்ளார் நாயகன், நண்பன் ராமுடன் அரட்டை மாற்றம் தாய் மாமன் முனீஸ்காந்த் என அனைவரின் நடிப்பில் திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது ராம் அண்ட் லீலா திரைக்கதை.
தினசரி அலுவலகத்திற்கு நாயகன் பைக்கில் செல்ல அவரது நண்பர் தினசரி அலுவலகத்துக்கு ரயிலில் பயணிக்கும் பொழுது நிறைய பெண்களை சந்திக்க முடியும் என்று ஐடியா கொடுக்கிறார் அதனைத் தொடர்ந்து சென்னை லோக்கல் ரயிலில் பயணிக்கிறார் அப்பொழுது நாயகி லீலாவை (வர்த்திகா) பார்க்கிறார் அவரை பின்தொடர சில நாட்களில் காதலிக்கத் தொடங்குகிறார் ஆனால் நாயகி மாலை 6 மணிக்கு மேல் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் சந்திக்க அனுமதிக்க மாட்டார் என்று கட்டளை இடுகிறார் நாயகனுக்கு.
நாயகன் நாயகியின் குடும்பத்தில் ஆறு மணிக்கு மேல் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தாருடன் இதைப் பற்றி விசாரிக்கிறார் அப்பொழுது அவரது குடும்பத்தினர் நாயகியின் ஒரு ஏலியன் என்றும் அவர் ஆறு மணிக்கு மேல் ஆணாகவும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும் மாறுவார் என்று கூறுகிறார் இதனை தொடர்ந்து நாயகன் என்ன முடிவு எடுக்கிறார் என்பது படத்தின் திரைக்கதை.
ராம் அண்ட் லீலா திரைப்படத்தின் இடைவேளைக்கு பிறகு தன் காதலித்த பெண்ணை ஒரு ஏலியன் என்றும் அவருக்கு இருக்கும் பிரச்சனையும் தன் குடும்பத்தாரிடம் சொல்ல முடியாமல் நாயகன் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார் மற்றும் நாயகி நாயகனை பிடித்திருப்பதாகவும் காதலித்து கல்யாணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கிறார் அதேபோன்று தனது முன்னோர்கள் பெண்ணாக உணரும் பொழுது பெண்ணாக மாறுவதாகவும் குழந்தை பெற்றுக் கொள்வதாகவும் நாயகனிடம் தனது நியாயத்தை தெரிவிக்கிறார்.
குடும்பத்தாரின் சம்பளத்தோடு நாயக நாயகி திருமணம் நடைபெற்றதா?
நாயகன் நாயகியை பற்றி உண்மைகள் தெரிந்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்?
நாயகனின் தங்கையின் காதல் நிறைவேறியதா?
இது போன்ற கேள்விக்கு பதில் ராம் அண்ட் லீலா திரைப்படத்தின் திரைக்கதை.