Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் அரிதான சாதனை ; மூளையில் 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றம்!

Posted on August 18, 2026

மூளைக்குச் செல்லும் வழியை உருவாக்குவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றும் ஒரு நுட்பமான மண்டையோட்டுத் திறப்பு அறுவைசிகிச்சை (கிரானியோடமி) மூலம் இந்த மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டது.

  • அறுவைசிகிச்சைக்கு முன்பு, கட்டியின் இரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைப்பதற்காக குறைந்தபட்ச ஊடுருவலுடன் கட்டியை சுருங்கச்செய்வதற்கு இரத்தக்குழாய்களை அடைப்பதற்கான (எம்போலை சேஷன்) செய்யபட்டது. சிகிச்சை

சென்னை, ஆகஸ்ட் 18, 2026: நவீன நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் தலையீட்டு மருத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, அடையாறில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் பல்துறை நிபுணர்கள் குழு, மருத்துவ வரலாற்றில் உலக அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய கட்டிகளில் ஒன்றான, 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. சிக்கலான மண்டையோட்டுத்திறப்பு அறுவைசிகிச்சையின் மூலம் இந்தக் கட்டியை அகற்றுவதற்கு முன்னதாக, கட்டியை சுருங்கச்செய்வதற்கு இரத்தக்குழாய்களை அடைப்பதற்கான (எம்போலைசேஷன்) சிகிச்சையின் மூலம் கட்டியின் இரத்த ஓட்டம் மருத்துவர்களால் கணிசமாக குறைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நோயாளிக்கு விடாப்பிடியான தலைவலி, பலவீனம் மற்றும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சிரமம் உள்ளிட்ட நரம்பியல் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. விரிவான மூளைப் பரிசோதனை செய்யப்பட்டதில் மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு திசுக்களான மெனிஞ்சியஸ் திசுக்களிலிருந்து தோன்றும் மூளை உறை புற்றுநோய் (மெனிஞ்சியோமா) என்ற மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் கட்டியை அகற்ற துல்லியமான மண்டையோட்டு திறப்பு அறுவைசிகிச்சை தேவைப்பட்டது. இது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றி, மூளைக்குள் சென்று கட்டியை அகற்றுவதற்கு வழிவகுக்கும் திறந்தநிலை மூளை அறுவைசிகிச்சையாகும். இருப்பினும், இந்த நுட்பமான, அதிக சிக்கலான அறுவைசிகிச்சைக்கு முன்பு, மருத்துவர்கள் எம்போலைசேஷன் என்ற நவீன, குறைந்தபட்ச ஊடுருவல் செயல்முறையை மேற்கொண்டனர். இதில் கட்டிக்கு இரத்தஓட்டத்தை வழங்கும் முக்கிய இரத்த நாளங்கள் தடுக்கப்பட்டு, இரத்த ஓட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இந்த செயல்முறையானது, அடுத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவியதுடன், நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவினருக்கு தெளிவான பார்வைநிலை கிடைப்பதை சாத்தியமாக்கியது; இதன் மூலம் கட்டியை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் அகற்ற முடிந்தது.

இந்த எம்போலைசேஷன் சிகிச்சையை நரம்பியல் இடையீட்டு சிகிச்சைப் பிரிவின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர். கார்த்திகேயன் எஸ். டாக்டர் சாய் பிரசாந்த் பி.ஆர். மேற்கொண்டபோது, மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆகிப் சலியா மண்டையோட்டு திறப்பு அறுவைசிகிச்சையை செய்தார். நரம்பியல் துறையின் இடையீட்டு சிகிச்சை, அறுவைசிகிச்சை, மயக்க மருந்தியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை வல்லுனர்கள் என பல்வேறு துறைகளுக்கிடையிலான நேர்த்தியான ஒருங்கிணைப்பு இந்த வெற்றிகரமான சிகிச்சை மேலாண்மையை சாத்தியமாக்கியிருக்கிறது.

இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், “மூளையில் இதுபோன்ற பெரிய கட்டிகள் மிகவும் அரிதானவை, உலகளவில் இதுபோன்ற சில நேர்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பல்துறை நிபுணர்களின் கவனமான திட்டமிடல் மற்றும் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாகவே இவ்வளவு பெரிய கட்டியை முழுமையாக அகற்ற முடிந்தது. அறுவைசிகிச்சைக்கு முந்தைய எம்போலைசேஷன் செயல்முறை, கட்டிக்கான இரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைத்ததால், அதிக பாதுகாப்புடனும் மற்றும் துல்லியத்துடனும் இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. உடல் இயக்கத்திறனை அதிகளவில் பாதிக்கக்கூடிய ஒரு செயல்முறை என்ற கண்ணோட்டம் பொதுமக்கள் மத்தியில் மூளைக் கட்டி அறுவைசிகிச்சை குறித்து இருக்கிறது. இருப்பினும், நவீன நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் நரம்பியல் இடையீட்டு நுட்பங்களின் சமீப முன்னேற்றங்கள் காரணமாக, இது போன்ற கவலைகள் இப்போது இருக்க வேண்டியதில்லை” என்றார்.

அடையாறு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் குழும மூலோபாய முயற்சிகளின் துணைத் தலைவர் திரு. வேணுகோபால் பட் கூறுகையில், “அறுவைசிகிச்சைக்கு முந்தைய நுட்பமான திட்டமிடலும், பல்துறை நிபுணர்களுக்கிடையே இருந்த சிறப்பான ஒத்துழைப்பும் மிகப் பெரிய மற்றும் அதிக இரத்த நாளங்களைக் கொண்ட மூளைக் கட்டிக்கான அறுவைசிகிச்சையின் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது. நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் நரம்பியல் இடையீட்டு மருத்துவத்தில் நிகழ்ந்திருக்கும் சிக்கலான மூளைக் கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முன்னேற்றங்கள், எவ்வாறு மேம்படுத்தியிருக்கின்றன என்பதையும் வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.” என்றார். இந்நிகழ்வு

  • MGM Healthcare Malar Removes Massive 890-Gram Brain Tumour, One of the Largest Ever ReportedThe tumour was removed through a meticulous craniotomy, an open brain surgical procedure
  • எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் அரிதான சாதனை ; மூளையில் 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றம்!
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
  • Guru Somasundaram- Anumol starrer romantic thriller drama ‘Paris Cafe’ Audio Launch held in Chennai
  • My role in Modha Rathri has a lot of emotions and love infused together”: Anishma Anilkumar on Her Mature Role in ‘Modha Rathiri’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme