Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

Posted on August 18, 2026

குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தைரியம், பெருமை என தேசப்பற்றை பேசும் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடலுக்கு இர்ஷாத் தலால் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை உலகை அறிமுகப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை இந்தப் பாடல் இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினாலும் அந்தப் பாடலிலிருந்து நேரடியாக எந்தவிதமான தாக்கத்தையும் பெறாமல், ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் இந்தப் பிரபலமான வார்த்தைக்கு புதிய கோணத்தை தருகிறது. இதன் மூலம் தேசப்பற்று உணர்வையும் நம் நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.

சுதீர் யாதுவன்ஷி தனது ஈர்க்கும் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார். ‘துரந்தர்’ படத்தின் டைட்டில் பாடல் மற்றும் ’துரந்தர்: தி ரிவென்ஜ்’ படத்தின் ‘ஆரி ஆரி’ பாடல் மூலம் பிரபலமான அவர், ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் பிரம்மாண்டத்திற்கும் தீவிர கதை களத்திற்கும் ஏற்ற வகையில் இந்தப் பாடலை பாடியுள்ளார். இர்ஷாத் தலால் எழுதியுள்ள பாடல் வரிகளில் தேசப்பற்று நிறைந்துள்ளது. படத்தின் இயக்குநரான ரதீஷ் வேகா, இசை மற்றும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார்.

ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘ஆபரேஷன் டிரால்’, தேசிய புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னணியில் உருவாகியுள்ள புலனாய்வு திரில்லர் திரைப்படமாகும். ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய ஆயுதப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஆக்‌ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் வலுவான தேசப்பற்று நிறைந்த கதைக்களம் ஆகும்.

ஜெயசூர்யாவுடன் முரளி ஷர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர்களான விக்ரம் கோச்சார், யஷ் பால் கேரா, மிர் சர்வார், சந்தன் பிஷ்ட், ஹன்சிகா ஜாங்கிட், வாணி டோக்ரா, ஜெய் தாக்கூர், விஜய் திரிவேதி மற்றும் மன்ஹர் சிங் ட்ரிவியா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ’ஆப்ரேஷன் டிரால்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது.

ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார். ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். இசை மற்றும் பின்னணி இசையை ரதீஷ் வேகாவே அமைத்துள்ளார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் நடிகர்களின் ஒப்பனையை கவனித்துள்ளார்.

’ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் இசை வெளியீடாக வந்துள்ள ‘ஜெய் ஹோ’, படத்தின் தேசப்பற்று மற்றும் அதிரடி நிறைந்த உலகத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.

  • கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின்
  • JIOHOTSTAR’S TAMIL ORIGINAL RESORT CROSSES 100 MILLION WATCH HOURS, SETS NEW PLATFORM BENCHMARKNearly half of the Tamil original’s watch time came from Hindi, Telugu, Malayalam and Kannada audiences
  • ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை!
  • எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!
  • Making My Producers Happy Is My Biggest Goal”: Raja Karuppasamy on His Directorial Debut ‘Modha Rathiri’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme