Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

Posted on August 18, 2026

’

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

டி23: தி அல்டிமேட் டிஸ்னி ஃபேன் ஈவண்ட் நிகழ்ச்சியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் விக்டர் வான் டூம் கதாபாத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், அகாடமி விருது வென்ற ராபர்ட் டவுனி ஜூனியர் (விக்டர் வான் டூம்/டாக்டர் டூம்), கிறிஸ் எவன்ஸ் (ஸ்டீவ் ரோஜர்ஸ்) மற்றும் ஹேலி அட்வெல் (பெக்கி கார்டர்) ஆகியோர் மேடையில் இந்த ஸ்பெஷல் புரோமோவை அறிமுகப்படுத்தினர்.

முதன்முறையாக டாக்டர் டூம் இந்த புரோமோவில் முக்கியத்துவம் பெறுகிறார். இதன் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியர், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரிய சூப்பர் வில்லனாக உருவெடுப்பது தெளிவாகிறது. வனேசா கிர்பி நடிக்கும் சூ ஸ்டார்ம், டாக்டர் டூமின் வில்லன் கதைக்களத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறார். அதே நேரத்தில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் வில்லனான டாக்டர் டூமுக்கும் தோருக்கும் இடையே நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான மோதலையும் இந்த புரோமோ காட்டுகிறது.

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தை ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிடோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், ஆண்டனி மேகி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ் பேக்ராக், வயாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, இயான் மெக்கெல்லன், ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ராமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான் கேமன், ரெபெக்கா ரோமிஜன், மேபெல் கேடனா மற்றும் டெனோச் ஹுவேர்டா மெஜியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தில், மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த பிரபல சூப்பர் ஹீரோக்கள், இதுவரை எதிர்கொண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஒன்றிணைகின்றனர். அவர்களின் உலகங்கள் ஒன்றோடொன்று மோதும் நிலையில், உயிர்வாழ்வதற்கான மிகப்பெரிய போராட்டம் தொடங்குகிறது.

’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

  • கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின்
  • JIOHOTSTAR’S TAMIL ORIGINAL RESORT CROSSES 100 MILLION WATCH HOURS, SETS NEW PLATFORM BENCHMARKNearly half of the Tamil original’s watch time came from Hindi, Telugu, Malayalam and Kannada audiences
  • ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை!
  • எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!
  • Making My Producers Happy Is My Biggest Goal”: Raja Karuppasamy on His Directorial Debut ‘Modha Rathiri’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme