Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விசிட் மலேசியா 2026′ சுற்றுலாத் திட்டம், அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு!

Posted on August 13, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள, மலேசிய சுற்றுலாத் துறை அழைப்பு !

சென்னை, 13 ஆகஸ்ட் 2026உலகளாவிய சுற்றுலாத் துறை தொடர்ந்து மாறிவரும் சூழலில், மலேசியாவின் முக்கிய சர்வதேச சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகிய இந்தியாவில், தனது ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்த, மலேசிய அரசின், மலேசிய சுற்றுலாத் துறை தனது சேல்ஸ் மிஷன் சீரிஸ் -2 (Sales Mission Series 2) என்னும் சுற்றுலா வர்த்தக நிகழ்வை ஆகஸ்ட் 12 முதல் 20, 2026 வரை சென்னை, மும்பை மற்றும் புதுடெல்லியில் நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்திய சுற்றுலா சந்தையுடனான வலுவான தொடர்பை மலேசியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.சென்னையில் நடைபெற்ற இந்த வர்த்தக நிகழ்வில், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் விமான சேவை கூட்டாளர்கள் உள்ளிட்ட 47 மலேசிய சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் பங்கேற்றனர். வர்த்தக கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், புதிய வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தியப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத் தலமாக மலேசியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்துதல் ஆகியவை இந்த நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும்.மேலும், மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாத் துறை பங்குதாரர்களுக்கு இடையே வர்த்தக சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் புதிய சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தளமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.இந்த நிகழ்விற்கு, மலேசிய சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநர் திரு. மொஹ்த் அமீருள் ரிசால் அப்துல் ரஹீம் (Mr. Mohd Amirul Rizal Abdul Rahim) தலைமை தாங்கினார். முன்னணி விமான நிறுவனமான பாட்டிக் ஏர் (Batik Air) உடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முயற்சி குறித்துப் பேசிய திரு. மொஹ்த் அமீருள் ரிசால் அப்துல் ரஹீம், “மலேசிய சுற்றுலாத் துறையின் மிக முக்கியமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சர்வதேசப் பயணச் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், சில பிராந்தியங்களில் பயணிகளின் மனநிலையை பாதிக்கக்கூடும்.இருப்பினும், இந்தியச் சந்தையில் வலுவான இருப்பை தொடர்ந்து நிலை நிறுத்தவும், இந்தியப் பயணிகளின் முதன்மையான தேர்வுகளில் மலேசியாவை தொடர்ந்து இடம்பெறச் செய்யவும் மலேசிய சுற்றுலாத் துறை உறுதி பூண்டுள்ளது. இதற்காக, விமான சேவை கூட்டாளர்கள் மற்றும் பயண வர்த்தகத் துறையினரின் நெருக்கமான ஒத்துழைப்புடன், தொடர்ச்சியான, இலக்கு சார்ந்த மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது” என்றார்.திரு. மொஹ்த் அமீருள் ரிசால் அப்துல் ரஹீம் மேலும் கூறுகையில், “இந்த நிகழ்வின் மூலம் வர்த்தகக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியச் சந்தைக்கு ஏற்ற வகையில் மேலும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த பயணத் திட்டங்களை உருவாக்கி எங்களது தொழில்துறை கூட்டாளர்களை ஊக்குவிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில், வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் தேர்வு செய்யும் கோலாலம்பூர் (Kualalumpur) மற்றும் கென்டிங் ஹைலண்ட்ஸ் (Genting Highlands) பயணத் திட்டங்களைத் தாண்டி, மலேசியாவின் பிற பகுதிகளையும் கண்டு களிக்க இந்தியப் பயணிகளை ஊக்குவிக்க விரும்புகிறோம்” என்றார்.”சரவாக் (Sarawak), லங்காவி (Langkawi), பினாங்கு (Penang), ஜொகூர் (Johor) மற்றும் சபா (Sabah) போன்ற சுற்றுலாத் தலங்கள் இந்தியச் சந்தைக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. இயற்கை, சாகசப் பயணங்கள் மற்றும் தீவு விடுமுறைகள் முதல் கலாச்சார பாரம்பரியம், உணவுக் கலாச்சாரம், ஷாப்பிங், குடும்பப் பொழுதுபோக்கு, மைஸ் (MICE) மற்றும் சுற்றுலாத் தல திருமண நிகழ்வுகள் (Destination Weddings) வரை பல்வேறு அனுபவங்களை இத்தலங்கள் வழங்குகின்றன.இந்த இடங்களை மேலும் விரிவாக விளம்பரப்படுத்துவதன் மூலம், பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிக்கவும், சுற்றுலாச் செலவினங்களை உயர்த்தவும், மீண்டும் மலேசியாவுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா, தொடர்ந்து மலேசியாவின் முக்கிய சர்வதேசச் சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வாரத்திற்கு 190-க்கும் மேற்பட்ட நேரடி விமான சேவைகள், 37,000-க்கும் அதிகமான இருக்கை வசதிகளுடன் இயக்கப்படுகின்றன. இந்த வலுவான விமானப் போக்குவரத்து இணைப்பு, இந்தியப் பயணிகளுக்கு மலேசியாவை எளிதாகவும், வசதியாகவும் சென்றடைய உதவுவதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரிப்பதற்கும் ஆதரவளிக்கிறது.

இந்தியச் சந்தையின் சுற்றுலாச் செயல்பாடுகளும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன. 2023 டிசம்பரில் இந்தியக் குடிமக்களுக்கு விசா இல்லா பயணம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை மலேசியா பதிவு செய்தது. இதன் மூலம் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும், மலேசியாவின் முதல் ஐந்து முக்கிய சர்வதேசச் சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இந்த சாதகமான வளர்ச்சி 2026-ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“விசிட் மலேசியா 2026” (Visit Malaysia 2026) சுற்றுலாத் திட்டம், 2027ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வேகத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும், நீட்டிக்கப்பட்ட காலத்திற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வலுவான திட்டங்களை உருவாக்கவும், இந்தியாவில் தனது விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மலேசிய சுற்றுலாத் துறை மேலும் தீவிரப்படுத்தும்.

இந்த நீட்டிப்பு, சுற்றுலாத் துறை பங்குதாரர்களுடனான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், மலேசியாவின் சுற்றுலாத் தலங்களின் பிரபலத்தையும் காட்சிப்படுத்தலையும் தொடர்ந்து நிலைநிறுத்தவும், உலகளாவிய சுற்றுலா சூழல் தொடர்ந்து மாறிவரும் நிலையில் சந்தையின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.

மலேசிய சுற்றுலாத் துறை பற்றி:

மலேசியா டூரிசம் ப்ரமோஷன் போர்டு (Malaysia Tourism Promotion Board), பொதுவாக டூரிசம் மலேசியா (Tourism Malaysia) என அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் (Ministry of Tourism, Arts and Culture Malaysia – MOTAC) கீழ் செயல்படும் ஒரு நிறுவனமாகும். மலேசியாவை விருப்பமான சுற்றுலாத் தலமாக உலகளவில் முன்னிறுத்துவதில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதல், உலகளாவிய சுற்றுலாச் சந்தையில் மலேசியாவின் இருப்பையும் போட்டித் தன்மையையும் வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.2026 (Visit Malaysia 2026 – VM2026), कंकी क 25 (UN Sustainable Development Goals – UNSDGs) ஏற்ப நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. நாட்டின் பல்வேறு இயற்கை வளங்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் பலதரப்பட்ட சுற்றுலா வாய்ப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதுடன், உள்ளூர் சமூகங்கள் மற்றும் சுற்றுலாத் துறை பங்குதாரர்களுக்கான உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீண்டகால மதிப்பை உருவாக்குவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

மேலும் தகவல்களுக்கு: Tourism Malaysia இணையதளம் மற்றும் அதன் Facebook, Instagram, X, YouTube மற்றும் TikTok சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடலாம்.

சுலேஹுதீன் அகமது
துணை இயக்குநர்

சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவு (ஆசியா / ஆப்பிரிக்கா)

solehuddin@tourism.gov.my
தொலைபேசி: +603 8891 8204
நோர்ஷரிசா முகமது சாத்
துணை இயக்குநர்
கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு
norshariza@tourism.gov.my
தொலைபேசி: +603 8891 8775

  • விசிட் மலேசியா 2026′ சுற்றுலாத் திட்டம், அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு!
  • TOURISM MALAYSIA STRENGTHENS INDIA MARKET ENGAGEMENT IN SUPPORT OF ‘VISIT MALAYSIA 2026’ CAMPAIGN THROUGH 2027
  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது
  • சூர்யாவின் 46-வது திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ஆகஸ்ட் 14 தேதி முதல் உலகெங்கும் பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகிறது மற்றும் டிக்கெட் ஆகஸ்ட் 11 முதல் முன்பதிவு திரையரங்குகளில் கோலாகலமாக தொடங்கியுள்ளது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme