Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

Posted on August 7, 2026

*புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’**தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.*அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்,“பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னர்களின் உணர்வை நினைவூட்டும் திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதாலும், நயன்தாரா – கவின் இணையும் முதல் திரைப்படம் என்பதாலும், அனுபவம் மிக்க நட்சத்திர பட்டாளம் ஒன்றாக இணைந்திருப்பதாலும், ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme