Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

Posted on July 28, 2026

ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. 

மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

CHENNAI,India—July 27, 2026   —  ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸான ‘வதந்தி’ சீரிஸின் இரண்டாவது சீசனான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். இதில் எம். சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இயல்பாக இணைக்கும் இந்த சீசன், வதந்தி தொடரின் அடையாளமான ‘வதந்தி Vs உண்மை’ என்ற மையக்கருவை மேலும் ஆழமாக ஆராய்கிறது. பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை, சிக்கலான கதாபாத்திரங்கள், உணர்வுபூர்வமான உறவுகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை இறுதி வரை பரபரப்பில் வைத்திருக்கும் வகையில் கதை நகர்கிறது. 

நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை. 

பிரைம் வீடியோ இந்தியா – ஒரிஜினல்ஸ் பிரிவு இயக்குநரும், தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், 

“தென்னிந்திய கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘வதந்தி’ எங்களுக்கு மிகவும் பெருமை சேர்த்த தொடர்களில் ஒன்று. முதல் சீசன், வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான எல்லையை மிகவும் வித்தியாசமாக சித்தரித்து, சஸ்பென்ஸ் குற்ற திரில்லர் வகையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. இப்போது இரண்டாவது சீசனை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இயக்குநராக இணைந்திருப்பதும், மதுரையின் கலாச்சாரப் பின்னணியில் நகரும் இந்த பரபரப்பான கதை தொடரை மேலும் உயர்த்தியுள்ளது. புஷ்கர் – காயத்ரியுடன் எங்கள் கூட்டணி தொடர்வது பெருமைக்குரியது. கலாச்சார வேர்களை இழக்காமல் உலகளாவிய ரசிகர்களை கவரும் கதைகளை உருவாக்கும் அவர்களின் திறமை அபாரமானது. இந்த சீசனும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார். 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறுகையில்,

“சஸ்பென்ஸ், உண்மை மற்றும் மனிதர்களின் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையைத் தக்கவைத்துக் கொண்டே, உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும் ஒரு கதையை இந்த இரண்டாவது சீசன் சொல்கிறது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இந்தக் கதையை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளார். தொடரின் அடையாளத்தைப் பாதுகாத்தபடியே, அதை புதிய திசையில் கொண்டு சென்றுள்ளார். சசிகுமார் மற்றும் முழு நடிகர் குழுவும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்கும் வகையில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளனர். கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்கு நன்றி. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்

  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்
  • Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise
  • சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme