
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & ஈரா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன் தயாரிப்பில் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன்,சேத்தன் ,ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி,செல் முருகன்,நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அன்பே டயானா’ மக்கள் தொடர்பு -யுவராஜ்.பாரி இளவழகன் அன்பே டயானா திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ள இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி குடும்பங்களின் பெரு ஆதரவை பெற்று வெற்றி கரமாக திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்க வைத்துள்ளது அன்பே டயானா .
இயக்குனர் பாரி இளவழகன் தனது முதல் படைப்பை தனது சொந்த மண்ணில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை அவர்கள் சந்திக்கும் பிரச்சினையை “ஜமா ” திரைப்படத்தின் மூலம் சாமானிய மக்களின் கவனம் பெற்ற இயக்குநர் பாரி இளவழகன், தனது இரண்டாவது படைப்பை குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ‘அன்பே டயானா’ படத்தில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்றுள்ளார் திரையில் காண்போரை “குடும்ப உறவு ,சமூக பொறுப்பு, காதல், நட்பு, நகைச்சுவை” என திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது அன்பே டயானா திரைப்படம்.
சென்னை பெரம்பூர் பகுதியில் கதைக்களமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து நாயகனாகவும் இயக்குனராகவும் ,இயக்கி உள்ளார் இயக்குனர் பாரி இளவழகன். சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் சாமானிய குடும்ப தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயகனின் தந்தை சேத்தன்–தாய் ரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர் தந்தை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தந்தை மற்றும் இட்லி தோசை மாவு வியாபாரம் செய்யும் ரோஜா குடும்பத்தை வழிநடத்தும் தாய் இவர்கள் குடும்பத்தில் இரண்டு மகன் ஒரு மகள் மூத்த மகன் விளையாட்டு பயிற்சி கொடுப்பவர் இரண்டாவது மகன் அரசு வேலைகள் பணிபுரிகிறார் மகள் கல்லூரி படிப்பு என நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர், மூத்த மகன் நாயகன் கிருஷ்ணா(பாரி இளவழகன்), விளையாட்டு பயிற்சியாளராக பணியாற்றுகிறார். அந்த நேரத்தில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த டயானாவை காதலிக்கிறார். இரு வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் வளர்ந்த இவர்கள் காதலுக்கு, குடும்பமும் சமூகமும் பெரிய சவாலாக மாறுகின்றன. குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கும் கிருஷ்ணாவின் தாய், இந்த உறவை ஏற்றுக்கொண்டாரா?நாயகன் கிருஷ்ணா பாரியின் திருமணம் நடந்ததா? நாயகன் கிருஷ்ணா–நாயகி மேஜிக் காதல் வெற்றி பெற்றதா? நாயகனின் அப்பா சேத்தன் உதவியோடு காதல் வெற்றி பெற்றதா? இது போன்ற கேள்விக்கு பதில் ‘அன்பே டயானா’ படத்தின் திரைக்கதை.