
நிஸ்ஸாம் பஷீர் இயக்கிய ‘ ஐ, நோபடி’ திரைக்கதை விறுவிறுப்பான, மலையாள திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது திரையரங்கில் வெளியாகி உள்ளது , “ஐ நோபடி” திரைக்கதை குற்ற-கொள்ளை திரில்லர் . ஒரு வங்கிக் கொள்ளையில் சிக்கிக்கொண்ட பிறகு வாழ்க்கை தடம் மாறும் ஒரு சாதாரண அரசு ஊழியராக பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்துவுடன் இணைந்து இதில் நடித்துள்ளார்.
“ஐ நோபடி” திரைப்படத்தில் தொடக்கத்தில் தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையர்களால் வங்கி லாக்கரிலிருந்து நகை மற்றும் 17 கோடி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது அதற்கு சாட்சியாக வங்கியில் ராஜீவன் (பிருத்விராஜ்) இந்த கொள்ளையர்கள் அவர்களுடன் பிணைய கைதியாக அழைத்துச் செல்ல அதனைதொடர்ந்த பரபரப்பான நெடுஞ்சாலை ஆக்ஷன் காட்சியுடன் படம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. “ஐ நோ படி” சாதாரண மனிதனான ராஜீவன் (பிருத்விராஜ்), எதிர்பாராதவிதமாக இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு ஒரு சாட்சியாக மாறுகிறான். இதனால் காவல்துறையினர் ஊடகங்களும் பொதுமக்களும் மற்றும் குடியிருப்பில் இருக்கும் மக்கள் என அனைவரும் நாயகன் ராஜீவன் ஒரு (நடமாடும் ATM) போல சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்குகின்றனர் அவரிடம் பிரச்சனை செய்து கொள்ளையடித்த பணத்திலிருந்து பங்கு கேட்பது மற்றும் பணம் பறிப்பது போன்ற வேலைகளை பொதுமக்கள் செய்கின்றனர். ஆகையால் தேவையற்ற மன அழுத்தமும் மறுபுறம் காவல்துறையினர் விசாரணை, மற்றும் ஊடகத்தின் செய்திகள் அவனது குடும்ப வாழ்க்கையை எவ்வாறு சீர்குலைக்கிறது, அதற்கு இந்த சாதாரண மனிதன் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறான் பொதுமக்கள் ஊடகம் , அரசியல்வாதிகள், காவல்துறை, இவர்களிடமிருந்து நாயகன் எவ்வாறு தான் குடும்பத்தை காத்துக் கொள்கிறார் என்பதே கதையின் முக்கிய கருவாகும்.
நாயகன் ராஜீவன் (பிருத்விராஜ்) ஒரு சாமானிய ‘நோபடி’ கதாபாத்திரமாக தனது நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை வெகுவாக கவர்ந்துள்ளார் அவரது சோகமான முகபாவனை மற்றும் அவரது உடல் மொழி மற்றும் அமைப்பும் அசாத்தியமான தைரியமும் என அனைத்தும் திரைக்கதைக்கு மலம் சேர்க்கும் வகையில் அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதை நம்ப திரையில் தனது நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் திரையிலும் காண்பாய் ரசிக்க வைத்துள்ளார், இரண்டு பெண் குழந்தைகள் தங்களது நடிப்பை திரையில் காண்போரை ரசிக்கவும் பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர் .
