
படத்தின் தொடக்கத்திலேயே அதர்வாவின் திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன. அதர்வாவின் தாய் மாமன் நட்டி நட்ராஜ் திருமணத்திற்கான வேலைகளை எடுத்து செய்து வருகிறார். திருமணம் நாளை நடக்கவிருக்கும் நிலையில் மாப்பிள்ளை நண்பர்களுடன் வெளிநாட்டில் உள்ளார்.உடனடியாக வெளிநாட்டில் இருந்து அதர்வா தனது நண்பர்களுடன் சென்னைக்கு வருகிறார். வரும் வழியில் விமானத்தில் பகத் பாசிலை பார்க்க, அவரிடம் தன்னுடைய காதலை பற்றி சொல்ல தொடங்குகிறார் அதர்வா.பள்ளி பருவத்தில் ப்ரீத்தி முகுந்தனை பார்த்த அதர்வா, அவரை காதலிக்க தொடங்குகிறார்.
பள்ளிப் பருவ நாயகி ப்ரீத்தி காதலிப்பதற்காக நாயகன் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார் அதில் டியூஷன் சென்டர், டென்னிஸ் விளையாடும் இடம் என ப்ரீத்தி செல்லும் இடத்திற்குள் அதர்வாவும் செல்கிறார். நாயகன் அதர்வா தனது காதலை நாயகியிடம் சொல்ல வேண்டுமென துடிக்கிறார். நாயகி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பூசனில் படிக்கும் நண்பர்கள் அதர்வாவை தனது வீட்டிற்கு ப்ரீத்தி அழைக்கிறார்.அங்கு சென்ற அதர்வா தனது காதலை சொல்லப்போகும் நேரத்தில், ப்ரீத்தி ஒருவர் அல்ல, இரட்டையர்கள் என தெரிய வருகிறது. இதனால், இதுநாள் வரை யாரை காதலித்தோம் என்கிற குழப்பத்தில் நாயகன் அதர்வா ப்ரீத்தியிடம் அவரால் காதலை சொல்ல முடியாமல் போகிறது பள்ளிப் பருவத்து காதல் சொல்ல முடியாமல் முடிகிறது.
நாயகன் சென்னைக்கு வந்துவிடுகிறார் தனது தாய் மாமாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் அப்பொழுது இந்தியாவின் உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால் தனது தங்கி இருக்கும் மொட்டை மாடி வீட்டில் பட்ஜெட் கை வைத்து கிரிக்கெட் மேட்ச் அதர்வாவின் தாய் மாமா நாட்டி மற்றும் பகுதி மக்கள் கண்டு களிக்கின்றனர் அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் கிரிக்கெட் மேட்ச் பார்க்க வருகிறார் அந்த இடத்தில் பகுதி கவுன்சிலர் மற்றும் நண்பர்கள் மது அருந்துவதால் நாயகனுக்கும் கவுன்சில் இருக்கும் இடையே சண்டை ஏற்பட பதில் நாயகனுக்கு கண்ணீர் அடிபடுகிறது அதனை மருத்துவரிடம் சென்று பார்க்கும் பொழுது அங்கு நாயகி மருத்துவ கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரை பார்த்தவுடன் நாயகன் காதல் வயப்படுகிறார் மற்றும் நாயுடன் நட்புடன் பேசி பழகுகிறார். ஆனால், தனது காதலை சொல்ல தயங்கிக்கொண்டே இருக்கிறார் நாயகன் அதர்வா. கல்லூரி முடிந்து கயாடு தனது சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில், ரயில் நிலையத்தில் தனது காதலை சொல்ல செல்கிறார் அதர்வா. ஆனாலும் அவரால் காதலை சொல்லவே முடியவில்லை.இப்படி தான் நேசித்த பெண்களிடம் காதலை சொல்லாமல் தவிக்கும் அதர்வா, இறுதியில் காதலை சொன்னாரா அல்லது தனக்காக தன் தாய் மாமா பார்த்து வைத்துள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டாரா என்பதே இதய முரளி திரைப்படத்தின் திரைக்கதை .