
மஹேஷ் பாபுவின் ஜிஎம்பி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் வெளியான படம் ‘ராவ் பகதூர்’. சத்யதேவ் நாயகனாக நடித்திருக்கும் ராவ் பகதூர்” அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ஈஸ்வரன் விஜயராகவன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஸ்மரன் சாய். இந்த படத்தில் சத்யதேவ் காஞ்சரானா, விகாஸ் முப்பலா, தீபா தாமஸ், ஆனந்த பாரதி, பால பராசர், பிரனய் வகா, குணால் கௌஷிக், மாஸ்டர் கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ராவ் பகதூர் திரைப்படத்தின் கதை களம் 1968 முதல் 1991 வரை. புவனம் ராமப்பா ராவ் பகதூர் – சத்யதேவ். சுதந்திரத்துக்கு பிறகு மதிப்பிழந்து போன ஒரு அரசு குடும்ப (சமஸ்தானத்தின்) கடைசி வாரிசு. இளமையில் உலகம் சுற்றி வந்தவர், பின் குடும்ப வாழ்கையில் நுழைகிறார். நாயகி நர்ஸ் ரேணுகா – தீபா தாமஸை காதலித்து திருமணம் செய்கிறார்.ஆனால் வாழ்க்கை அவரை சோதிக்கிறது. கல்லீரல் புற்றுநோய், மனநல பிரச்சனை, மதுவுக்கு அடிமை. டாக்டர்கள் 4 மாதம்தான் என்கிறார்கள். ஆனால் அவர் 1 வருடத்துக்கும் மேல் வாழ்கிறார்.
ராமப்ப ராவ் பகதூர் (சத்யதேவ்) .வாட்டும் ஒரே கேள்வி: “என் இரண்டாவது மகன் (நிறத்தில் கருமையாக பிறப்பதால்) உண்மையில் எனக்கு பிறந்தவன்தானா?” இந்த சந்தேகம் என்கிற பேய் அவரை எப்படி ஆட்டிப்படைக்கிறது, அதன் முடிவு என்ன . இருப்பினும், கடுமையான மனநோய்களால் அவதிப்பட்டு வருகிறார். குறிப்பாக, அவரை ஒரு சந்தேகம் ஒரு பெரும் பூதமாகப் பிடித்து வாட்டுகிறது. அதைத் தீர்த்துவிட்டால் போதும்… மகிழ்ச்சியாக இறந்துவிடுவேன் என்று தன் நண்பரும், தனிப்பட்ட மருத்துவருமான ஆச்சாரி (விகாஸ் முப்பலா) யிடம் வாக்குறுதி வாங்கிக் கொள்கிறார். அப்படியானால் அவரது சந்தேகம் என்ன? அதனால் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்தினார்? ராமப்பாவின் கடந்த காலம் என்ன? ரேணுகா (தீபா தாமஸ்) உடனான காதல், திருமணப் பயணம் எப்படி இருந்தது? அவருக்குத் தூரமாக ராமப்ப தனித்து வாழக் காரணம் என்ன? இது போன்ற கேள்விக்கு பதிலே ராவ் பகதூர் திரைப்படத்தின் திரைக்கதை.
