Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

Posted on July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

விரைவில் தமிழில் வெளியாகும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில்.. கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படம் – விரைவில் தமிழில் வெளியாகிறது.

இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘ பிகில்’ ஐ எம் விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இளம் கால்பந்து விளையாட்டு வீரர்களின் கால்பந்தாட்ட கனவின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அச்சாபு மூவி மேஜிக் மற்றும் மாஸ் மீடியா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி எஸ் ஸ்டான்லி – ஃபைசல் லத்தீப் – ஷோனி ஸ்டீஜோ செபஸ்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் அசோக் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கால்பந்தாட்ட விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள உள்ளூர் இளைஞர்கள் – உலக கால்பந்தாட்ட ஜாம்பவானான மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதை தெரிந்து கொண்ட நாயகன்(Hero) ஆண்டனி வர்கீஸ்.. அந்த இளைஞர்களை ஒன்று திரட்டி இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐ எம் விஜயனிடம் அறிமுகம் செய்கிறார். அவர் இந்த இளம் வீரர்களின் ஆர்வத்தையும், திறமையையும் கண்டறிவதுடன் அவர்களுக்கு பயிற்சியாளராகவும் செயல்படுகிறார் விஜயன். இந்நிலையில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியில் இந்த இளம் வீரர்கள் அடங்கிய ‘7 ஸ்டார் பாய்ஸ்’ குழு கலந்து கொள்கிறது. அரை இறுதி போட்டி வரை முன்னேறும் இந்த 7 ஸ்டார் பாய்ஸ் அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

மேலும் இந்தக் கதையில் கால்பந்தாட்ட வீரரின் காதலும் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதி 25 நிமிடங்கள் கால்பந்தாட்ட போட்டிக்கான காட்சிகள் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் இந்த தருணத்தில் கால்பந்து விளையாட்டின் பின்னணியில் இப்படம் வெளியாவதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுக்கும் என்பதும் ‘காட்டாளன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான ஆண்டனி வர்கீஸ், ‘பிகில்’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் ஐ எம் விஜயன் ஆகியோர் நடித்திருப்பதால்… இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

7 ஸ்டார் பாய்ஸ் திரைப்படம் தமிழில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

  • AZ06 production பட நிறுவனம் சார்பில் SM முகமது அசாருதீன் இயக்கி தயாரித்து வரும் திரைப்படம் அலப்பற கிளப்புறோம் இவர் ஏற்கனவே ஹாப்பி பர்த்டே லூசி திரைப்படத்தை இயக்கியவர்
  • பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமீதா பைஜு நடிக்கும் ‘ #PRS01’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு*
  • லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலனுக்காக, நடிக்க வாங்க அஜித்குமார் அவர்களே…அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களுக்கு மன்சூர் அலிகானின் பணிவான வேண்டுகோள்!
  • கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’
  • நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme