Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !

Posted on July 1, 2026

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’…

தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival – SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது.

சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருப்பது, படக்குழுவிற்கும் தமிழ்த் திரைப்பட உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

காளிதாஸ் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். பரத் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மேலும் அரவிந்த் ஆனந்த் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். ‘காளிதாஸ் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது.

தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது, ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப தரத்திற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சாதனை, தமிழ்ச் சினிமாவின் உலகளாவிய பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
  • Two Powerful Women. One Unforgiving Rivalry. A Legacy at Stake:
  • “Haiku Gave Me the Opportunity to Explore Two Different Phases of a Man’s Life” – Actor Aegan
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்
  • Vibrant Gujarat Global Summit 2027 Roadshow Held in Chennai, Highlights Opportunities for Industrial Collaboration
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme