
மம்மட்டியான் ஸ்டார்ஸ் (Mammattiyaan Stars) என்பது ஜூன் 26 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும் தமிழ் ஒரிஜினல் வெப் தொடர் ஆகும்.
கிரிக்கெட் மற்றும் (கிரிக்கெட்) தலையின் தீவிர ரசிகராக கிராமப் பகுதியில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் தனது கிரிக்கெட் நட்சத்திர வீரர் தலையின் இறுதி போட்டியை நேரில் கண்டு களித்து சிறப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் ஆகையால் தன் கிராமப் பகுதியில் உள்ள நண்பர்கள் மற்றும் தன் கல்லூரியில் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்று தலையில் இறுதி போட்டியை காண பல்வேறு வகையில் பணத்தை சேர்க்கின்றனர் ஒரு கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர், மொத்தம் 6 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இதில் முதல் இரண்டு பகுதி மெதுவாகவும் அடுத்தடுத்து பகுதிகள் திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது மம்பட்டியான் ஸ்டார் இணைத்தொடர்.
கல்லூரி வயதில் ஏற்படும் எண்ணங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் போனால் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
ஆண் ,பெண் இளைஞர்கள் தங்கள் கட்டுக்குள் இல்லாமல் கட்டுப்பாடற்ற இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசும் தொடர் மம்முட்டியான் ஸ்டார்.
இன்றைய இளைஞர்கள் பேராசையுடன் தங்களது எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் குடும்பம் மற்றும் நட்பு பிற்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இணை தொடர் மம்முட்டியான் ஸ்டார்.
கிராமத்தில் உள்ள சாமானிய கல்லூரி மாணவர்கள் தங்களது கிரிக்கெட் நட்சத்திர நாயகனின் இறுதிப் போட்டியை கண்டு களித்தார்களா?
