
“தி ஹிடன் புரோடெக்டர்” அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான அனிமேஷன் (Animated) மற்றும் ஃபேண்டஸி திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியாகிறது சிறந்த தொழில்நுட்ப (பொம்மை) கார்ட்டூன் திரைப்படத்தை குறிப்பாக 1 மணி நேரம் 53 நிமிடங்கள் திரைப்படம் திரையில் எங்கும் சலிப்பு ஏற்படாமல் திரைக்கதை நகர்வது பாராட்டத்தக்கது. சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது “தி ஹிடன் புரோடெக்டர்” திரைக்கதை .
“தி ஹிடன் புரோடெக்டர்” இன்றைய அதி நவீன “3D” தொழில்நுட்பத்தை கொண்டு திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது குறிப்பாக திரைப்படத்தை காணோம் குழந்தைகளுக்கு புரியும் படியான எளிமையான திரைக்கதை அமைத்து அதில் அவர்களுக்கு பிடித்தமான கற்பனை, சகோதர பாசம், நட்பு, குடும்ப பாசம், சமூகத்தில் அக்கறை மற்றும் வீரத்தை கொண்டாடும் வண்ணமயமான திரை விருந்து. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் இணைந்து ரசிக்கக்கூடிய, தொழில்நுட்ப ரீதியாகவும் கதை ரீதியாகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தரமான 2D, 3D அனிமேஷன் திரை விருந்து “தி ஹிடன் புரோடெக்டர்” .
“தி ஹிடன் புரோடெக்டர்” திரைக்கதை சீன பாரம்பரியக் கதைகளில் இடம்பெறும் ‘நியான்’ புராணக் கதை அதிநவீன அனிமேஷன் (2D,3D) வடிவத்தில் திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது மற்றும் 3D தொழில்நுட்பம் பின்னணி இசை தனித்துவமான அடையாளத்தை திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இதனால் “தி ஹிடன் புரோடெக்டர்” திரைப்படம் வழக்கமான குழந்தைகள் படங்களை விட திரையில் காணும் பொழுது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் படியான ஒரு புதிய அனுபவத்தை ரயில் கொடுத்துள்ளது மிக சிறப்பு .
பிரையர், பிராம்பிள் (Briar, Bramble) மற்றும் விக் (Vick) ஆகிய இரண்டு கரடிகள், ‘நியான்’ என்ற பெண்(Nian) மற்றும் சீனர்களின் நியான் என்ற புராணக்கதை மையமாக வைத்து (மனித) புனித சக்திக்கும் மற்றும் மந்திர (தீய) சக்திகளுக்கும் இடையே ஒரு மாய உலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு மனித மற்றும் அழியாத உலகங்களை அழிக்கத் திட்டமிடப்படும் ஒரு சதியை எதிர்த்து, இந்த மூவரும் எப்படி அதை முறியடிக்கிறார்கள் என்பதுதான் “தி ஹிடன் புரோடெக்டர்” திரைப்படத்தின் கதை
