
ஒரு பெருவிருட்சத்தின் நிழல் சரிந்துவிட்டது,எங்கள் வைகை ஆறு வற்றிவிட்டது,எங்கள் செங்காட்டில் ஓணான்கள் இறந்துவிட்டன.மேற்கு தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்து விட்டது,பால்பாண்டி என்ற பாரதிராஜாவே…இயக்குனர் இமயமே…உங்களைப் போன்றதொரு படைப்பாளி இனி இந்த மண்ணில் பிறக்கப் போவதில்லை.எல்லோரையும் வாரி அணைத்து நீங்கள் காட்டிய அந்த எளிய அன்பும்,கலைஞர்களை கனிவோடு தட்டிக்கொடுத்து நீங்கள் தந்த ஊக்கமும் என்றும் மறையாதவை.மண்ணின் கதைகளைப் பேசிய நீங்கள் மண்ணோடு கலந்தாலும்,நீங்கள் விட்டுச் சென்ற மனிதநேயத்தின் ஈரம் என்றும் காயாது!மலை உச்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சின்னப்ப தாஸ்,அலைகள் ஓய்வதில்லை… ஓயாத அலைகளின் சத்தம்,முதல் மரியாதை… தூக்க முடியாத இளந்தாரிக்கல்,உங்கள் மயிலின் சூரியகாந்தி பூ சிரிப்பு,கிழக்குச் சீமையின் காற்று…படம் ஆரம்பிக்கும் போது இரு கரம் கூப்பி மக்களை கும்பிடும் அந்த கருத்தக் கைகள்,’என் இனிய தமிழ் மக்களே’ என்ற அந்தக் குரல்…எல்லாம் காலத்தால் அழியாதவை!போய் வாருங்கள் ஆசானே…வணங்கி நிற்கிறேன்.ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.