Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Posted on May 27, 2026

டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.கிரியேட்டிவ் புரடியூசர் அனந்திதா சுந்தர் அவர்கள் பேசும்போது, நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இ�

  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme