Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சர்வதேச அளவில் மெகா ஹிட் அடித்துள்ள ஆரா 10/10!*

Posted on May 24, 2026

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம், மாதேஷ் மாணிக்கம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார்.‌ கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் டீசர்- ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரா பத்துக்கு பத்து’ எனும் பாடல் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி சர்வதேச ஹிட் அடித்தது. ரேடியோ, ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என எல்லாவற்றிலும் பெரிய ஹிட் அடித்த ஆரா 10/10 பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “பப்பாளி பழமே”, “கோவிந்தம்மா” உள்ளிட்ட பாடல்களும் ஹிட் அடித்து இணையத்தை கலக்கி வருகிறது.*நடிகர்கள்:*ஹிப்ஹாப் தமிழா ஆதிகேதிகா சர்மாசைத்ரா ஜே ஆச்சார்ரம்யா ரங்கநாதன்ஹர்ஷத் கான்நாசர்கருணாஸ்யோகி பாபுஆடுகளம் நரேன்கருணாகரன்ஷா ரா*தொழில்நுட்பக் குழு*தயாரிப்பு: அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்இசை: ஹிப்ஹாப் தமிழாபடத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்பென்ஸ் மீடியா சிஇஓ: ஆர். மதன் குமார்நிர்வாக தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமிகலை இயக்கம்: வி. எஸ். தினேஷ் குமார்தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபிநடனம்: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாபாசண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்டிஜிட்டல் இன்டர்மீடியட்: நாக் ஸ்டுடியோஸ்கலர்ஃபுல் கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்விஎஃப்எக்ஸ்: 85FX, ஹோகஸ் போகஸ்கூடுதல் வசனங்கள்: கரன் கார்க்கி மற்றும் நித்திஷ் டிடைட்டில் கார்டு அனிமேஷன்: அஸ்வின் குமார்மார்க்கெட்டிங்: பாங்க் டிஜிட்டல்தயாரிப்பு மார்க்கெட்டிங் குழு: பீட்ரூட்விளம்பர வடிவமைப்பு: ராகவார்ட்ஸ்முடி மற்றும் ஒப்பனை வடிவமைப்பு: வேல்முருகன்ஆடை உதவியாளர்: அருண்ஸ்டில்ஸ்: பி. கே. ராஜாஒலி கலவை: கண்ணன் கணபத்ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ் குமார்தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஹரி வெங்கட் சிதயாரிப்பு மேலாளர்: விக்னேஷ் ரத்தினம்மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 மீடியா)மியூசிக் லேபிள்: சரிகம இந்தியா லிமிடெட்

  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme