Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

Posted on May 21, 2026

*பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!*“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.தொழில்நுட்ப குழுஎழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்எடிட்டிங்: அருள் மோசஸ்இசை: ஷான் ரோல்டன்கலை இயக்கம்: ராஜ் கமல்உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்மக்கள் தொடர்பு: யுவராஜ்

  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
  • Two Powerful Women. One Unforgiving Rivalry. A Legacy at Stake:
  • “Haiku Gave Me the Opportunity to Explore Two Different Phases of a Man’s Life” – Actor Aegan
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்
  • Vibrant Gujarat Global Summit 2027 Roadshow Held in Chennai, Highlights Opportunities for Industrial Collaboration
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme