Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று 17.5.2026 சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் பேசியதாவது.தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்ன பத்தி ஒரு ரெண்டு மூணு விமர்சனங்கள்

Posted on May 17, 2026

அ

வசர பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று 17.5.2026 சூப்பர் ஸ்டார்*ரஜினிகாந்த் பேசியதாவது*.தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்ன பத்தி ஒரு ரெண்டு மூணு விமர்சனங்கள் சோசியல் மீடியால அரசியல் உலகத்தில பரவலா வந்திற்றுக்கு… அதுக்கு வந்து நான் விடை கொடுக்கலைன்னு சொன்னா அது வந்து உண்மையா ஆயிடும்… நான் நேற்று பெங்களூர் சென்றிருக்கும்போது நீங்க யாராவது வந்து இருப்பீங்க விடை கொடுக்கலாம் என்று நினைத்தேன்… திரும்பி வரும்போதும் அங்க மீடியா யாரும் இல்ல.. பதினெட்டாம் தேதி கேரளாவில் ஷூட்டில் இருந்தது அப்போதும் அதற்கு விடை கொடுக்கலாம் என்று இருந்தேன் அப்போதும் நீங்க யாரும் வரல.. முதலாவதாக தேர்தல் முடிவுகள் வந்தபோது நான் ஸ்டாலின் சாரை போய் பார்த்தேன் அது கொஞ்சம் விமர்சனங்கள் வந்துச்சு.. ஸ்டாலின் சார் என்னுடைய 38 ஆண்டுகளாக நண்பர் எங்களுடைய நட்பு கொள்கைகள்,அரசியலுக்கு அப்பாற்பட்டது… ஜனநாயகத்தின் தோல்வி வெற்றி சகஜம்.. இருந்தாலும் ஸ்டாலின் சார் கொளத்தூரில் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது.. அப்படியா நான் பேசுறேன் அதற்காக நண்பன் என்ற முறையில் நட்பு முறையில் நான் போய் பார்த்தேன்…. அதுக்கு நான் விஜய் வந்து சிஎம் ஆக கூடாது.. அவர் வரக்கூடாதுன்னு அதை தடுக்க பார்த்தேன்.. மேலும்.. வேறு ஏதோ ரெண்டு பெரிய பார்ட்டி வந்து சேரணும்னு சொல்றாங்க… அப்படின்னு சில விமர்சனங்கள் வருது… அந்த சூழ்நிலையில அப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படிப் பேச ரஜினிகாந்த் ஒரு தரம் கெட்ட ஆள் இல்லை.. அதை நான் தெளிவுபடுத்துகிறேன் இரண்டாவதாக நான் விஜய் வாழ்த்தவில்லை என்று சொல்கிறார்கள்அவர் ஜெயிச்ச உடனே நான் எக்ஸ்ட்ராத்துல வாழ்த்துக்கள் பதிவிட்டேன் நான் 2016ல அரசியலுக்கு வரேன்னு சொன்னபோது ஏர்போர்ட்டில் மீடியாக்காரங்க இருப்பாங்க அவர்களுக்கு பதில் சொல்வது வழக்கம்… அதேபோல் . மீடியா காரங்க இருப்பாங்களான்னு கேட்டபோது மீடியாக்காரர்கள் இல்லை என்று சொன்னார்கள்… திடீர் என்று ஒரு சின்ன போன் வைத்துக்கொண்டு ஒருவர் கேள்வி கேட்க அவர் மீடியாக்காரன் இல்லாதது போல் எனக்கு தெரிந்தது… திடீரென்று வந்து விஜய் சிஎம் ஆயிட்டாரு அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேள்விகள் எழுப்ப,… நான் ஷாக் ஆயிட்டேன் மீடியா மாதிரியே தெரியல எனக்கு.. நான் சிரித்துக் கொண்டே போய் விட்டேன்.. அதற்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று ஒரு விமர்சனம் வைக்கிறார்கள்.. மற்றொன்று விஜய் மேல் எனக்கு பொறாமை என்று.. நான் அரசியலில் இல்ல அரசியலில் இருந்து விலகி விட்டேன் நான் அரசியலில் இல்லாத போது எனக்கு ஏன் அவர் மேல் பொறாமை.. ஒருவேளை கமலஹாசன் முதலமைச்சராக வந்திருந்தா பொறாமை வந்திருக்குமோ தெரியாது….அப்போ கூட வந்திருக்காது… கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது… எனக்கும் விஜய் க்கும் ஒரு ஜெனரேஷன் கேப் இருக்கு. கிட்டத்தட்ட 25 வருடம்.. நான் முதலிலேயே சொல்லி இருக்கேன் நான் வந்து விஜய கம்பேர் பண்ணா அது எனக்கு நல்லதல்ல கெட்ட பேரு.. விஜய் என்ன கம்பேர் பண்ண அது அவருக்கு கெட்ட பேரு.. விஜயை நான் சின்ன வயசுல இருந்து அவரை பார்த்துகிட்டு இருக்கேன்.. அவர் முதலமைச்சர் ஆனதில் எனக்கு என்ன பொறாமை… அதுவும் இந்த சின்ன வயசுல 52 வயசுல எம்ஜிஆர் என்டிஆர் சாதனை பண்ணத விட ஜாஸ்தி.. கம்ப்ளிட்டா சென்டர் பிஜேபி.. எவ்ளோ பெரிய பவர்ஃபுல் சென்டர்.. இங்க ரெண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளா வந்து ஜெயிச்சிருக்காங்க.. அதுவும் சினிமா இண்டஸ்ட்ரில இருந்து எனக்கு பொறாமை இல்ல ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம்.. சோ எனக்கு பொறாமை இல்ல விஜய் அவங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு ஜனங்க கிட்ட.. அந்த எதற்கு எதிர்பார்ப்பு எல்லாம் அவர் சந்திச்சு மக்களுக்கு நல்லது செய்யணும்.. செய்வாங்க.. என்ற நம்பிக்கை இருக்கு… அவருக்கு வாழ்த்துக்கள்… பதவியேற்பு விழாவின்போது ஜெயலலிதா அவர்கள் ஆசைப்பட்டிருந்தாங்க நான் போயிருந்தேன் அது மட்டும் சொல்ல நினைத்தேன் மிஸ் ஆயிடுச்சு… நினைவு கூர்கிறேன்..என்று ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினார்

  • Two Years After Stem Cell Transplant, Survivor of Rare Blood Disease Meets His Donor
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
  • Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals
  • காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு:சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்.
  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme