Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்

Posted on May 16, 2026

இயக்கம் + தயாரிப்பு*: பாபு விஜய் – ஏ.ஆர். முருகதாஸிடம் ‘சர்கார்’, ‘தர்பார்’ படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

நடிகர்கள்: ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, KGF புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர்-

*இசை*: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

*ஒளிப்பதிவு*: ரிச்சர்ட் எம் நாதன்

*ரிலீஸ்*: 15 மே 2026

சட்டென்று மாறுது வானிலை திரைப்படம் கமர்ஷியல் அம்சங்கள் காதல், கிரைம், ஆக்ஷன், திரில்லர் என எல்லாம் கலந்த திரைக்கதை. மெதுவாக தொடங்கி இறுதியில் வேகம் எடுக்குது திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.

நாயகன் ஜெய் ஆதரவற்ற நிலையில் படித்து ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து கண்டு அங்கு இருக்கும் நண்பர்களுடன் தனது வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வருகிறார், நாயகி மீனாட்சி கோவிந்தராஜனை ஒரு சில இடங்களில் பார்த்து பழகிய இருவருக்கும் பிடித்து போக காதலித்து திருமணம் செய்கிறார். ஹனிமூனுக்கு கொடைக்கானல் போகும்போது கருடா ராமின் ரெசார்ட்டில் தங்குகிறார்கள். அங்கு ஒரு மர்மம் இருப்பதை ஜெய் கண்டுபிடிக்கிறார். இன்னொரு பக்கம் மீனாட்சியின் தந்தை அமைச்சர் அஜய், மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய முடிவு செய்கிறார். மீனாட்சியின் நண்பரும் சொத்துக்காக அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இந்த பிரச்சனைகளுக்கு நடுவே ஜெய் – மீனாட்சி ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் .சட்டென்று மாறுது வானிலை திரைப்படத்தின் திரைக்கதை.

நடிகர் ஜெய் நடிப்பின் மூலம் நடனம், அழுகை, பாசம் என எல்லாத்திலும் ஸ்கோர் பண்ணியிருக்கார். மீனாட்சியுடன் ரொமான்ஸ் காட்சிகள் கவனிக்க வைக்குது.*மீனாட்சி கோவிந்தராஜன்*: எதார்த்தமான நடிப்பு. பாசம், கோபம், வெறுப்பு என திரையில் ரசிக்க வைத்துள்ளார்.

*வில்லன்கள்*: கருடா ராம், அஜய் ரெண்டு பேரும் வில்லத்தனத்தில் திரையில் மிரட்டியிருக்காங்க

*டெக்னிக்கல்*:ரிச்சர்ட்

M நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பழம் மலைப்பகுதியை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் திரையில் ரசிக்கும் படி ஒளிபரப்பு செய்துள்ளார்.

கிரிஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ‘அக்கடி கொழுத்து பக்கடி’ பாடல் ஹிட். பாரதியார் பாடலில் ராப் கலந்தது அருமை.

  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
  • இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!*எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme