Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்

Posted on May 15, 2026

எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும் இந்த தொடர் சமூக கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. 7 எபிசோடுகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர் சுமார் 3.5 மணி நேரம் கொண்டதாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவில் எக்ஸாம் இணை தொடரில் இன்று வெளியாகி 15/5/2026 சற்குணம் இயக்கத்தில் இத்தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா காஷ்யப் மற்றும் நரேன் மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு: புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவில் (தமிழ்நாட்டில்) நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளைச் மையமாக வைத்து ஒரு பெரும் மோசடியை திரை கதையாக தேர்வு அறையில் நடக்கும் திகில் சம்பவங்களை விவரிக்கும் கதையாக “அமேசான் பிரைம் வீடியோவில் எக்ஸாம் இணை தொடரில் அமைக்கப்பட்டுள்ளது”. எக்ஸாம். மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது .

இந்தியாவில் நடைபெறும் அரசு பொதுத்தேர்வு தொடங்கி சிவில் சர்வீஸ் மற்றும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு மையப்படுத்தி அதில் நடக்கும் முறைகேடுகளை திரைக்கதையாக உருவாக்கி இதுவரை இல்லாத புது விதமான வெப் சீரிஸ் தான் எக்ஸாம். சில வருடங்களுக்கு முன்னதாக தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வைச் சுற்றி ஏற்பட்ட வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் நிலையில், அதேபோன்ற பின்னணியில் வெளியாகியுள்ள எக்ஸாம் தொடர் தற்போது மக்களிடையே அதிக கவனம் பெற்று வருகிறது.அமேசான் பிரைம் வீடியோவில் எக்ஸாம் இணை தொடர் அரசு உயர்பதவிக்கான தேர்வுகளை குறிவைத்து செயல்படும் மோசடி கூட்டத்தின் செயல்பாடுகள் திரைக்கதையாக அமைத்து அதனை திரையில் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி நடித்துள்ளனர் தேர்வு எழுதும் பணக்காரர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் பறித்து, அவர்களை உயர்ந்த தரவரிசையில் தேர்ச்சி பெறச் செய்வதே அந்த மோசடி கூட்டத்தின் வேலை.

எக்ஸாம் இணை தொடரின் போலி காவல் அதிகாரியாக (கதாநாயகியாக)நடித்துள் துஷாரா நடிப்பு மிக சிறப்பு ஜான்சி என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், புதிதாக பணியில் சேரவிருந்த காவல் அதிகாரி மரமல்லியை கடத்தி வைத்து, அவரது அடையாளத்தில் மலைப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குள் நுழைகிறார். தேர்வு மோசடி கூட்டத்தின் ரகசியங்களை அறிந்து அவர்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பது தொடரின் இறுதி பாகத்தை நெருங்கும் போது தெரிய வருகிறது. இணை தொடரின் நாயகியின் இந்த முயற்சிக்கு அவருக்கு முன்பு இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட சிலர் உதவ முன்வருகின்றனர்

.

துஷாரா விஜயன்துஷாரா விஜயன் இந்த தொடரின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறார். பதட்டம், தைரியம், பயம் ஆகிய உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். காவல் அதிகாரியாக அவர் நடித்த விதம் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். பின்னணி இசையும் மலைப்பகுதி காட்சிகளும் தொடரின் பரபரப்பை அதிகரிக்க உதவுகின்றன.

  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
  • திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள், சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்
  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme