Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Mutthu Engira KAATTAAN WEB SERIES REVIEW

Posted on March 27, 2026

முத்து என்கிற காட்டான் இணை தொடர விமர்சனம்

10 எபிசோடுகளைக் கொண்ட முத்து என்கிற காட்டான்இணை தொடர்.

தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள காவல் நிலையம், வழக்குகள் ஏதுமின்றி மூடப்படும் நிலையில் இருக்கிறது. அப்போது ஊரின் மலை குன்று அடிவாரத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு தலை பொதுமக்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கிறார்கள் அதனை தொடர்ந்து காவலர்கள் அங்கு சென்று ஆய்வு செய்யும் பொழுது துண்டிக்கப்பட்ட தலையுடன் ஒரு பையில் கட்டுக் கட்டாக பணம் மற்றும் ஒரு கடிதமும் கிடைக்கிறது. அந்தத் தலைக்குச் சொந்தக்காரர் முத்து என்கிற காட்டன் (விஜய் சேதுபதி) என்பது தெரியவருகிறது.

இந்த மர்மமான துண்டிக்கப்பட்ட தலை யாருடையது என்று விசாரிக்க ஹெட் கான்ஸ்டபிள் காளை பாண்டியன் (வடிவேல் முருகன்) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சித்தார்த்தன் தலைமையிலான குழு, முத்துவின் பின்னணியை விசாரிக்கத் தொடங்குகிறது.

தமிழக காவல்துறை துண்டிக்கப்பட்டவரின் தலையை விசாரிக்க தொடங்கும் போதே திரைக்கதையும் நம்மையும் சேர்த்து தேடலில் இணைத்துக் கொள்கிறது.

போலீசார் விசாரணையில் முத்துவின் வாழ்க்கை பயணம் தமிழகம் தாண்டி கேரளம் வரை விரிகிறது. அவர் ஒரு டான்ஸ் குழுவில் டிரைவர், சிறந்த கடிகாரம் பார்ப்பவர், யானைப் பாகன், ஆட்டுப்புழுக்கை வாங்குபவர்,(ஹோட்டல் சர்வருக்கு உதவும் போது) ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் காவலர் எனப் பல முகம் கொண்டவராக திரையில் பண்போரை ரசிக்க வைக்கிறார் இந்த முத்து என்கிற காட்டன்.

உண்மையில் யார் இந்த முத்து என்கிற காட்டான்?
அவர் உண்மையில் கொல்லப்பட்டார்?

முத்து என்கிற காட்டான் கொன்றது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் முத்து என்கிற காட்டான் வெப் தொடர்.

  • அமரம் திரை விமர்சனம்
  • ஹாய் திரை விமர்சனம்
  • டாக்சிக் திரை விமர்சனம்
  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme