Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Roll Time Studios – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

Posted on March 25, 2026

Roll Time Studios தயாரிப்பில் புதிய திரைப்படமான “movie title” இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.

படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மேலும் படத்தொகுப்பை லாரண்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக கலை இயக்குனராக பிரதீப் ராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடித்து நடிகர் சூரி ரோலிங் சொல்லி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அக்சன் சொல்லி படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.

இந்த படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும்.முக்கியமாக இளைஞர்களை கவரும் திரைப்படமாக உருவாகிறது.

திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், கதை விவரங்கள், மற்றும் வெளியிட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும்.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme