Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் ‘Blood Followed The Flood’ எனும் டேக்லைன் கொண்ட புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு!

Posted on March 24, 2026

இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் #மைத்ரிதமிழ்03 என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.

நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

இயக்குநர்: ஆர் ரவிக்குமார்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)
மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme