Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!

Posted on February 28, 2026

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸின் கதை எதை மையமாகக் கொண்டது என்பது குறித்து முழு விவரம் வெளியாகாதபோதிலும், டீசர் மிகப் புதுமையான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M. மணிகண்டனின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். முன்பு ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி என அற்புதமான இரண்டு படங்களில் இந்த கூட்டணி ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட படைப்புகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மனித உணர்வுகள், சமூக அரசியலின் நுணுக்கங்கள் மற்றும் இயல்பான கதை சொல்லும் பாணியில் தனித்துவம் கொண்ட இயக்குநர் மணிகண்டன், இந்த OTT முயற்சியிலும் அதே வலிமையை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் எளிமையான ஆனால் ஆழமான நடிப்பு, கதைக்கு மேலும் உயிரூட்டும் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இவர்களின் கூட்டணியை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்த நிலையில் இந்த டீசர் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இந்த சீரிஸில் நடிகர் பட்டியலிலும் பல வலுவான பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன்
VJ. பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்துறை அனுபவம் கொண்ட இந்த நடிகர்கள் இணைந்திருப்பது, சீரிஸின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்து என்கிற காட்டான் தமிழ் OTT உலகில் வித்தியாசமான கதையமைப்புடன் வெளியாகும் முக்கியமான சீரிஸாக பார்க்கப்படுகிறது. டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் படைப்பாக இது அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை, B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு – ஜியோ ஹாட்ஸ்டார்,
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்குநர்கள் – B. அஜித் குமார், M. மணிகண்டன்
கதை / திரைக்கதை – M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்
ஒளிப்பதிவு – N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்
எடிட்டர் – B. அஜித் குமார்
இசையமைப்பாளர் – ராஜேஷ் முருகேசன்
கலை இயக்குநர் – ஜாக்கி, சாபு மோகன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

link : https://youtu.be/PZEwB1fWtkY?si=D1Qeh679tkFWLOlq

  • Ramayana’s Mangala Vanname OUT NOW; Brings Lord Rama and Maa Sita’s Love Story toLife Through Stunning Visuals and Soulful Music
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme