Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காமெடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது!

Posted on February 17, 2026

நடிகர்கள் கார்த்தி, ஆர்யா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் படப்பிடிப்பு துவக்கம்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது

.

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்‌ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

’மரகத நாணயம்2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர்கள்: இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்கம் – ஏஆர்கே சரவன் ,
இசை – திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,
கலை இயக்கம் – என்.கே. ராகுல்,
படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர்,
வசனம் – ராஜேஷ் கண்ணன்,
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,
உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,
நடன அமைப்பு – ரகு தாபா,
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் பி,
தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,
ஒலி கலவை – உதயகுமார்,
விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,
மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,
மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,
பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,
சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme