Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

Posted on February 15, 2026

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில்,
ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. (Global Conference on Education for a Sustainable Future (GCE 2026) மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி (Common Ground International Academy) பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக (Keynote Speaker) அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ தாப்பா SDG Impact Award – விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த சர்வதேச மாநாடு யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம் (UNESCO Youth Education Research Center) தலைமையில், பாங்காக்கில் உள்ள ஐ.நா மாநாட்டு மையத்தில் ( United Nations Conference Centre, Bangkok) நடைபெற்றது. மேலும், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்து பெற்ற நிலையான வளர்ச்சி கவுன்சிலுடன் (
Sustainable Development Council) இணைந்து நடத்தப்பட்டது.

GCE 2026 மாநாட்டில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், , உலகம் முழுவதும் இருந்து வந்த கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் முன்னிலையில் ரூஹி தனது ஆழமான மற்றும் வலிமையான உரையை வழங்கினார்.


“குழந்தைகள் நாளைய எதிர்காலம் மட்டுமல்லர். இன்றைய பூமித் தாயின் காவலர்களும் ஆவர்” என்ற முழக்கத்தை அவரது உரை எடுத்துரைத்தது.

UNESCO தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் காலநிலை செயற்பாட்டில் ரூஹியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டியது.

யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய மேடையில் ரூஹி மொஹசப் பெற்ற இந்த அழைப்பு, தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல — இந்தியாவிற்கே ஒரு வரலாற்று தருணமாகும்.

வயது தலைமைத்துவத்திற்கோ, தைரியத்திற்கோ, தாக்கத்திற்கோ தடையல்ல என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த அங்கீகாரத்தின் மூலம், யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய அரங்கில் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலராக ரூஹி மொஹசப் வரலாறு படைத்துள்ளார்.

  • _*Actor Ravi Mohan Joins Benz as One of the Protagonists; Heightens Excitement Around the LCU*_Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers in Tamil cinem
  • பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது
  • இளையராஜா இசையுலக சாதனையில் 50 வது ஆண்டு பொன்விழாவை சென்னையில் கோலாகல கொண்டாட்டம்
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme