Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Country Club-இன், “Chalo Pattaya” VIP சர்வதேச உறுப்பினர் அட்டையை அறிமுகப்படுத்தி, ஆசியாவின் மிகப் பெரிய “Darlings Day Out 2026”அறிவிப்பினை கிளப்பின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. ஒய். ராஜீவ் ரெட்டி வெளியிட்டார்.

Posted on February 8, 2026

சென்னை சவேரா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமைகளில் கிழக்கத்திய நாடுகள் முக்கிய பங்கு வகித்து வரும் இன்றைய சூழலில், அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு பிராண்டாக கண்ட்ரி கிளப் புதிய வரையறையை வழங்கி வருகிறது.

Country Club இன்று “கிழக்கின் டிஸ்னிலேண்ட்” ஆக உருவெடுத்து வருகிறது. ஆனால் அது கேளிக்கை பூங்கா அல்ல; மாறாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நினைவில் நிலைக்கும் அனுபவங்களை உருவாக்கி, பாதுகாத்து, மீண்டும் அனுபவிக்க உதவும் ஒரு முழுமையான அனுபவ சூழலை வழங்கும் நிறுவனம்.

பாரம்பரியமும், கலாச்சாரமும், பன்முகத்தன்மையும்கொண்ட சென்னை எப்போதும் கண்ட்ரி கிளப்பிற்கு நம்பகமான முக்கிய சந்தையாக இருந்து வருகிறது.

இந்திய நாட்டின் முன்னணி வாழ்க்கைமுறை மற்றும் விருந்தோம்பல் நிறுவனமான (lifestyle and hospitality) கண்ட்ரி கிளப் ஹாஸ்பிடாலிடி மற்றும் ஹாலிடேஸ் லிமிடெட் (Country Club Hospitality and Holidays Ltd.) சலோ பட்டாயா எனும் முக்கியஸ்தர்களுக்கான சர்வதேச உறுப்பினர் அட்டையை இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. சென்னை முதல் பட்டாயா வரை கலாச்சாரம், கடற்கரை மற்றும் சமூகங்களை இணைக்கும் மகிழ்ச்சியும் ஒன்றிணைவையும் கொண்டாடும் பயணமாக சலோ பட்டாயா உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய கொண்டாட்டமாக டார்லிங் டே அவுட் 2026 நிகழ்வையும் கண்ட்ரி கிளப் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, ரூ.2,25,000/- மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த VIP சர்வதேச உறுப்பினர் அட்டையின் மூலம், இரு நபர்களுக்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் பட்டாயாவில் 2 இரவுகள் / 3 நாட்கள் இலவச தங்கும் வசதி வழங்கப்படுகிறது.

முன்பதிவு மற்றும் பயண விதிமுறைகள்:

விமானம் மற்றும் அறை முன்பதிவு 30 நாட்களுக்கு முன் செய்ய வேண்டும்

அறைகள் இருப்பைப் பொறுத்து வழங்கப்படும்

நேரடி விமான சேவை உள்ள விமான நிலையங்கள் மட்டுமே பொருந்தும்

AirAsia, IndiGo போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் மூலம் பயணம்

MGM (Member-Get-Member) திட்டத்தின் கீழ், ஏற்கனவே உள்ள உறுப்பினர் ஒருவர் புதிய VIP International Membership-ஐ அறிமுகப்படுத்தினால், அவருக்கும் அதே 2 இரவுகள் / 3 நாட்கள் பட்டாயா இலவச தங்கும் வசதி வழங்கப்படும்.

இந்த உறுப்பினர் திட்டம், கண்ட்ரி கிளப்பின் ஆடம்பரம், வெளிப்படைத்தன்மை மற்றும் உலகத் தர பயண அனுபவங்களுக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

Darlings Day Out 2026
ஆசியாவின் மிகப் பெரிய புத்தாண்டு கொண்டாட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “Darlings Day Out” நிகழ்வை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கண்ட்ரி கிளப்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய Darling’s Day கொண்டாட்டமாக அமைவுள்ள இந்த நிகழ்வில், பிரமாண்டமான ஃபேஷன் ஷோக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெறும்.

இதன் சிறப்பு அம்சமாக, கண்ட்ரி கிளப் உறுப்பினர்களே ரேம்பில் நடைபோடுவது இந்த நிகழ்வுக்கு தனித்துவத்தை வழங்க உள்ளது.

கண்ட்ரி கிளப் தனது புகழ்பெற்ற “Great Thumbs Up” நிகழ்ச்சி மூலம் உறுப்பினர்கள் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போன்ற சிறப்பு தருணங்களை மறக்க முடியாத அனுபவங்களாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற பாடகி உஷா உதூப் அவர்களின் சிறப்பு பாடல் மூலம் உறுப்பினர்களின் கொண்டாட்டங்கள் மேலும் சிறப்பானதாக மாற்றப்படும்.

தங்கள் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்காக இந்த புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய கிளப்பின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு.ஒய். ராஜீவ் ரெட்டி,
கண்ட்ரி கிளப்பில், மறக்க முடியாத அனுபவங்களையும், உயர்தர ஆடம்பரத்தையும் வழங்குவதே தங்களுடைய முதன்மை நோக்கம் என்றார். தங்களது உறுப்பினர்களுடன் மேலும் பல சிறப்பு தருணங்களை கொண்டாட ஆவலுடன் இருபோதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு:
🌐 www.countryclubindia.net

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme