Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ரெட் லேபிள் திரை விமர்சனம்

Posted on February 7, 2026

ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின் தயாரித்திருக்கும் ரெட் லேபிள் படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஆர். வினோத்
இதில் லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுதியவர்: பொன் பார்த்திபன், இசையமைப்பாளர்: கைலாஸ் மேனன் , பாடியவர்கள்: சின்மயி ஸ்ரீPபாதா, வேல்முருகன், கவிதா கோபி , ஒளிப்பதிவாளர்: சதீஷ் மையப்பன் , எடிட்டர்: லாரன்ஸ் கிஷோர் , கலை: பிரகதீஸ்வரன் ,சண்டை நடன இயக்குனர்: பாண்டம் பிரதீப், விளம்பர வடிவமைப்பு: ஸ்ரீP அரவிந்த் கேசவன், பிஆர்ஒ:- ஸ்ரீPதர் ராஜு, உதய குமார், ஹரி பாபு

கோயம்புத்தூரை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து  ஒரு விறுவிறுப்ப​hன மர்மத் திரில்லராக மற்றும் காதல், குடும்பம் மற்றும் இன்றைய காலகட்டத்து அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை கல்லூரி தேர்தல் பின்னணியில் ஒரு சாமானிய இளைஞன் எப்படி அதிகாரம் படைத்த சமூகத்தின் மத்தியில் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் மையக்கரு. 2019ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் படிக்கும் கதிர் (லெனின்) கல்லூரி மாணவர் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர். கல்லூரியில் நடக்கும் மாணவர் தேர்தல் முறைகேடுகள் மற்றும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் ஒரு போராளியாக கதிர் இருக்கிறார்.அதே கல்லூரியில் படிக்கும் கரூர் எம்எல்ஏ மகள் பவித்ரா (அஸ்மின்) கதிருக்கு காதலியாகவும் ஆதரவாகவும் துணை பரிகிறார்வி.

நாயகி பவித்ராவின் தந்தை கரூர் மாவட்ட (ஆர்.வி.உதயகுமார்) எம்எல்ஏ சண்முகராஜன் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் மற்றும்

லஞ்சம், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்.  இவருக்கும் கதிருக்கும் இடையே ஏற்படும் பகை நிலவுகிறது.

நாயகன் கதிரை காவல்துறை அதிகாரி கதிர் மீது மூன்று பொய் வழக்கு பதிவு செய்கிறார் அதனைத் தொடர்ந்து அவரைப் பழிவாங்கத் துடிக்கிறார். நான்காவது வழக்கு பதிவு செய்தால் குண்டர் சட்டத்தில் 10 வருடம் ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க முடியும் என்று எம்எல்ஏவும், காவல் அதிகாரியும் சேர்ந்து கதிரை எதிராக பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து அதே கல்லூhயில் மாணவர் தேர்தல் வர அந்த தேர்தலில் போட்டியிடும் ரோகித்திற்கு எதிராக நாயகி பவித்ராவின் சகோதரன் பாண்டியன் களமிறங்குகிறான். அரசியல்வாதி மகன்  அந்தக் கல்லூரியில் ஒரு ஆசிரியரிடம் தப்பாக நடந்து கொள்வதை சகோதரனின் செயல்களை சிறிதும் விரும்பாத பவித்ரா தன் காதலன் கதிரை கல்லூரி தேர்தலில் நிற்கும் ரோகித்திற்கு ஆதரவாக களம் இறஙகுகிறார் இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைத்தது?

நாயகி பவித்ராவின் குடும்பத்திற்கு கதிரின் காதல் தெரிய வர,பவித்ராவிற்கு தன் சொந்தத்தில் ரௌடியாக வலம் வரும் மாமாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கும் வேளையில், கதிர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொலை வழக்கில் சிக்கி போலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அந்தச் சிக்கல் என்ன?
நாயகன் கதிர் அந்த கொலை பழியிலிருந்து எப்படி ? யாரால் விடுபட்டார்?
கல்லூரி தேர்தல் நேர்மையான முறையில் நடந்து யார் வெற்றி பெற்றார்கள்? 
நாயகன் கதிரின் காதலி செய்த தியாகம் என்ன?
அரசியலும் தனிப்பட்ட பகையும் எப்படி இவர்கள் வாழ்க்கையை மாற்றியது?
என்பதுதான் ரெட் லேபிள் திரைப்படத்தின் திரைக்கதை .

  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme