Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

எலிஃபென்டைன் (ELEPHANTINE) நிறுவனத்தின் அமெரிக்க இயக்குனர் அதிதி மதன் குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Posted on December 24, 2025

எலிஃபென்டைன் (ELEPHANTINE) நிறுவனத்தின் சார்பில் சிவஜோதி நடனப்பள்ளியின், குரு ஸ்ரீமதி தேஜஸ்வினி ராஜின் மாணவர் அதிதி மதன்குமாரின் சிறப்பான பரதநாட்டிய தனிநிகழ்ச்சி,
மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற்றது.

ஸ்ரீமதி தேஜஸ்வினி ராஜ் சிவஜோதி நடனப்பள்ளியின் மாணவி அதிதி மதன்குமாரின் வசீகரிக்கும் தனி பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேறியது. இவர் கலைகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்காவின் ‘எலிஃபென்டைன்’ நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி. காயத்ரி ராஜாஜி நட்டுவாங்கம் இசைக்க, பாலஸ்கந்தன் மிருதங்கம் வாசித்தார். விக்னேஷின் வாய்ப்பாட்டும், சிகாமணியின் வயலினும், அனந்த நாராயணனின் வீணையும் அடங்கிய பக்கவாத்திய இசை நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

இந்நிகழ்ச்சியில் ரமணன் பாலகங்காதரன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட, கலைமாமணி மதுரை ஆர். முரளிதரன், அதிதியின் நடன பாவங்கள் மற்றும் நுணுக்கமான நடனத் திறமையை வெகுவாகப் பாராட்டினார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூஜெர்சியில் அதிதி, தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். சிறந்த திறமை கொண்ட கலைஞரான இவர், பல்வேறு முத்திரைகளையும் அடவுகளையும் லாவகமாகக் கையாண்ட விதம் மற்றும் மேடையில் அவர் வெளிப்படுத்திய கம்பீரம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

மேலும் இந்நிகழ்ச்சியில், தொடய மங்கலப்பாடலான தேவஸ்துதி, மார்கம் – அலாரிப்பு, ஹரி ஹரி பஜனை, ஸ்வாமி நான் உந்தன் அடிமை எனும் வர்ணம், தசாவதாரம், சக்தி கூத்து உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைக்கப்பட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி அவர் உலகளாவிய பெரிய மேடைகளை நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme