Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ரேகை ஜீ5 வெப் சீரிஸ் விமர்சனம்

Posted on November 29, 2025


பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ‘ரேகை’ வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

குற்றாலம்  பகுதியில் காவல் அதிகாரியாக பணியாற்றும் வெற்றி (பாலஹாசன்). குற்றாலம் பகுதியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் ஒரு இளைஞர் இறந்து கிடக்கிறார். இவர் வெற்றியின் உதவியுடன் மேற்படிப்பு மேற்கொண்டு வருகிறார் இவர் குடும்பப் பின்னணி ஏழ்மையில் உள்ளதால் வெற்றி உதவுகிறார்.

அந்த இளைஞரின் மரணத்திற்கான காரணத்தைத் தேட தீவிரம் காட்டும் வெற்றி, மர்மமான விஷயங்களுக்குப் பின்னாலிருக்கும் மர்மங்களை  ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார் வெற்றி.விடுதியிலிருந்த அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.

இறந்துபோன இளைஞரின் கைரேகையுடன், அதே சமயத்தில் இறந்துபோன வேறு மூவரின் கைரேகையும் ஒத்துப்போகிறது.தேடி பார்க்கும்போது, கிடைக்குற ஒற்றை தடயம் “ரேகை” நால்வருக்கும் ஒரே மாதிரியே இருக்கிறது. எப்படி நாலு பேருக்கும் ஒரே மாதிரி ரேகை வரும்? இதில்தான் மர்மம் ஆரம்பம்.

இந்த நால்வருக்கும் என்ன தொடர்பு, இந்த நால்வரையும் கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பதை ஆறு எபிசோடுகளில் ராஜேஷ் குமாரின் நாவலைத் தழுவிய மெடிக்கல் த்ரில்லர்; இந்த ரேகை  வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme