Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் திரை விமர்சனம்

Posted on November 29, 2025


தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பிரகாஷ் ராஜ், பிரியான்ஷு பைன்யுலி மற்றும் தோட்டா ராய் சவுத்ரி ஆகியோர் நடித்துள்ள இந்த காதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘தேரே இஷ்க் மெய்ன்’ தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் இணைந்து நடிக்கும் முதல் படமாகும். இருவரின் ஜோடியும் திரையில் மிகவும் ரசிக்கப்படுகிறது. தனுஷ் இதற்கு முன்பு இயக்குநர் ஆனந்த் எல். ராயுடன் ‘ராஞ்சனா’ மற்றும் ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

கல்லூரியில் படித்து வரும் தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். மறுபக்கம் தனது ஆய்வறிக்கை (thesis) மூலம் எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும், அவரை நார்மலான மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார் க்ரீத்தி. வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும். இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார்.

ஆனால், தனுஷுக்கோ தன்னை காதலித்தால் ஆய்வறிக்கைக்கு உதவுகிறேன் என கூறுகிறார். சரி, நான் இதை காதலாக பார்க்கவில்லை, நீ வேண்டும் என்றால் காதலித்துக் கொள் என கீர்த்தி கூற, இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார்.

அங்கு, தான் ஒரு IAS அதிகாரி Prelims, Mains, and Interview ஆகியவற்றை கடந்து இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்திருக்கிறேன். உன்னுடைய தகுதி என்ன, நீ என்ன வேலை செய்கிறாய் என தனுஷிடம் கீர்த்தியின் தந்தை கேட்கிறார். இதனால் மனமுடைந்து போகும் தனுஷ், தானும் UPSC படிக்கிறேன், அதில் Prelims, Mains, and Interview முடித்து அதிகாரி ஆகி காட்டுகிறேன் என கூறி, கீர்த்தியை காத்திரு என சொல்லிவிட்டு செல்கிறார்.

மூன்று வருடங்களுக்கு பின், Prelims முடித்துவிட்டு கீர்த்தியை பார்க்க வருகிறார் தனுஷ். ஆனால், கீர்த்தி தனக்கான வாழ்க்கை துணையை தேடி கொண்டார், இருவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், தனுஷ் அங்கு வர மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. இந்த கலவரத்தால் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார் தனுஷ், காவல் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லும் பொழுது  தனுஷின் சிறுவயது கணவனை பைலட் ஆக வேண்டும் என்று உமது ஆசை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டு வேகமாக வண்டியை ஓட்ட  பிரகாஷ் ராஜ்  மரணமடைகிறார். ஒரு பக்கம் காதலிக்கு திருமணம், மறுபக்கம் தந்தையின் மரணம்..

காதலியின் திருமணம் மற்றும் தந்தையின் மரணம் இரண்டிலிருந்து தனுஷ் எப்படி மீண்டார்?


சங்கர் தனுஷ் தனது சிறுவயது (பைலட்) கனவை  நிறைவேற்றினார்?


காதல் சாமானிய மனிதனை எந்த உயரத்திற்கும் எடுத்துச் சொல்லும் என்பதற்கான சான்று தான் இந்த தேரே இஷ்க் மே திரைப்படம்.


முதல் பாதையில் தனுஷின் நடிப்பு கல்லூரி மாணவனாக மற்றும் ஒரு நடுத்தர வாழ்க்கையின் வாழும் மனிதர்களின் இயல்பையும் திரையில் ரசிக்கும் படியாக இருந்தது இரண்டாம் பாதியில் காதல் மற்றும் தன் உறவுகளை இழந்தும் தன் லட்சியத்தை நோக்கி பயணித்து வெற்றி பெற்ற தனுஷின் உள்ளுணர்வு கோவங்கள் தணிந்ததா என்பது தேரே இஷ்க் மே திரைப்படத்தின் திரைக்கதை.


பிரகாஷ் ராஜ் பொறுப்புள்ள அப்பாவாக அம்மா இல்லாத மகனை வளர்க்கும் தந்தையின் வலியையும் பாசத்தையும் திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார் குறிப்பாக தன் மகன் செய்த தவறுக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது பிரகாஷ்ராஜ் நடிப்பு மிகவும் சிறப்பு.


முக்தியை (கிருத்தி சனோன்) நடித்திருக்கும் நாயகி கல்லூரியில் தன் இயல்பான நடிப்பினையும் இரண்டாம் பாதியில் தன் காதலை உணர்ந்து தன் செய்த தவறுகளை எண்ணி  தேவதாஸ் போல காதலில் பாதிக்கப்பட்டு வாடும் காட்சிகளில் க்ரீத்தியின் நடிப்பு மிகவும் சிறப்பு மற்றும் திரைக்கதையின் இறுதியில் தனுசை பார்க்கும் பொழுது அவரின் குற்ற உணர்வுகள் மற்றும் அவரின் நடிப்பு திரையில் கண்கலங்க வைத்தது.

திரைப்படத்திற்கு வசனம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது மற்றும் இசை பின்னணி இசை திரைப்படத்தை ரசிக்க வைத்தது.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme