Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரை விமர்சனம்

Posted on November 29, 2025


தயாரிப்பு : கருப்பசாமி


இயக்கம் : சுகவனம்.ஆர்


நடிப்பு : பரோட்டோ முருகேசன், விஜயன், வித்யா சக்திவேல், சித்ரா நாகராஜன், விஜய் சேனாதிபதி


இசை : நடராஜன் சங்கரன்


ஒளிப்பதிவு : ஜே.டி.விமல்


மக்கள் தொடர்பு : நிகில் முருகன்


வெளியான தேதி : நவம்பர் 28, 2025


திரைப்படத்தின் கால அளவு : 2 மணிநேரம் 01 நிமிடம்

கொங்கு கிராமத்து மக்களின்  வாழ்வியல், அங்கே நிலவும் பாகுபாடுகள், நில சுரண்டல்கள், விவசாய தொழிலாளிகளின் அவலங்கள், ஒரு குடும்ப தலைவனின் தவிப்புகளை திரைக்கதையாக வடிவமைத்து திரையில் சாமானியர்களின் நடிப்பையும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் திரையில் ரசிக்க வைத்துள்ளது ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரைப்படம்.
ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரைப்பட தொடக்கத்தில்  முருகேசன்  மகன் சிறுவயதில்  கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடும்போது , தனது குல தெய்வமான ஒண்டிமுனியிடம் ‘என் மகனை பிழைக்க வைத்தால் இந்த ஆட்டை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார் ‘  விவசாய முருகேசன். மகன் பிழைக்க, அந்த கிடாயை கோயிலுக்காக நேர்ந்து விட்டு வளர்க்கிறார் ஆனால் பல  ஆண்டுகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது அதற்கு காரணமாக அந்த கிராமத்தில் வாழும் , இரண்டு பண்ணையார்கள் யார் பெரியவர்கள் என்ற  பிரச்னையால் ஒண்டிமுனி கோயிலுக்கு திருவிழா நடத்த முடியாத நிலை. தனது வறுமையிலும் கிடாயை வேண்டுதலுக்காக பாதுகாக்கிறார். ஆனால், முருகேசன் மகன் தனது காதலிக்காக பைக் வாங்குவதற்காக அந்த ஆட்டை  கசாப்பு கடைக்காரருக்கு விற்று விடுகிறார், அதனை முருகேசன் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட கடா என்று கூறி காக திருப்பிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து மீட்டு வருகிறார் முருகேசன்.

முருகேசன், முருகேசன் மகனும், மருமகனும். தடைகளை தாண்டி ஒண்டிமுனிக்கு திருவிழா நடந்ததா?

ஆடு நேத்தி கடன் செய்து  விருந்து ஆனதா?

மனிதர்களுக்குள் இருக்கும் வன்மம் ஒண்டிமுனியும் நல்லபாடனும் கோவிலில் பலி கொடுக்கப்பட்டதா?

போன்ற கேள்விக்கு பதிலே  ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரைப்படத்தின் திரைக்கதை.
திரைப்படத்தை. சுகவனம்.ஆர் இயக்கி இருக்கிறார். நல்ல பாடன் என்பது கதைநாயகன்  முருகேசன் தனது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme