Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காந்தா திரைவிமர்சனம்

Posted on November 14, 2025

இன்று வெளியாகும் காந்தா திரைப்படத்தின் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

காந்தா திரைப்படத்தின் இடைவேளைக்கு முன் இந்திய சுதந்திர அடைந்த பிறகு தமிழ் திரை உலகில்  பிரபல நடிகராக இருக்கும் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்

காந்தா திரைப்படம் இடைவெளிக்கு பின் மாடர்ன் ஸ்டுடியோவில் நடைபெற்ற நடிகையின் கொலை தொடர்பாக  விசாரணையாக இரண்டாம் பாதிப்பு நகர்கிறது.

காந்தா திரைப்படத்தின்.

காந்தா படத்தின் தொடக்கத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுடுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் மாடல் ஸ்டுடியோ நடைபெறும் திரைப்படம் இயக்குவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது அதில் துல்கர் சல்மான்  ஆளாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனியின் தனது தாயின்  கதையாக (பெயரில்) “சாந்தா” என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகரான துல்கர் சல்மான், மீண்டும் அந்த படத்தை தொடங்க முடிவு செய்கிறார். அதன்படி, மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆனால், இந்த முறை சாந்தா என்ற தலைப்பு காந்தாவாக மாறி திரைப்படம் தொடங்குகிறது கதை மற்றும் காட்சியமைப்பில் டி கே எஸ் மகாதேவன் “துல்கர் சல்மான் ” சில மாற்றங்களை செய்கிறார். தனது  கனவு  கதை என்பதால், படத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி, நாயகன் TKS மகாதேவன் நடிப்பு சக்கரவர்த்தி என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார் தனது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கதையை மாற்றுவதை பொறுத்துக் கொண்டாலும், தான் எழுதிய கிளைமாக்ஸுடன் தான் படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இயக்குனர். இயக்குனர் (ஐயா)சமுத்திரக்கனி ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட நாயகியின் உதவியை நாடுகிறார் தனது கதையின் “நாயகன் நாயகி” எல்லாம் எனது தாய் (சார்ந்த)  மையமாக வைத்து எழுதப்பட்ட கதை என்பதால் திரைப்படத்திற்கு    நாயகிக்கு தான் முக்கியத்துவம் என்று கூறி பாக்யஸ்ரீ-ன் உதவியை நாடுகிறார் இயக்குனர் ஐயா. காந்தா கிரைம் த்ரில்லர் படமாக திரையில் அனைவரும் ரசிக்கும் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
நடிப்பு சக்கரவர்த்தி டி கே எஸ் மகாதேவனின் முயற்சி வெற்றி பெற்றதா?
பிரபல இயக்குனர் ஐயா சமுத்திரக்கனியின் தனது கனவு கதை திரைப்படமாக்கப்பட்டதா?
காந்தா திரைப்படத்தின் நாயகியின் ஆசை நிறைவேற்றப்பட்டது?
காந்தா திரைப்படத்தின் நாயகியை திட்டமிட்டு கொலை செய்தது யார்?
போன்ற கேள்விக்கு பதில் காந்தா திரைப்படத்தின் சுவாரசியமான திரைக்கதை.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் அப்போதைய நடிகர் கதாபாத்திரத்தில்  துல்கர் சல்மான் சிறப்பாக நடித்துள்ளார் கதைக்கு உயிர் கொடுக்கும் வகையில் துல்கர் சல்மான் திரையில் காணும்போது நடிப்பு சக்கரவர்த்தி என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார் அவரது  முகபாவனை , உடலமைப்பு, சிகை அலங்காரம், வசீகரமான முகம் மற்றும் துர்கர் சல்மானின் டி கே எஸ் மகா தேவனாக தனது வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றம், அவமானம், கோபம், ஏக்கம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் தனது நடிப்பின் மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மான்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் திரைப்பட இயக்குநர் ஐயாவாக “ஐயா” வாழ்ந்து திரையில் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்  சமுத்திக்கனி,  நாயகனுக்கு இணையான வேடம் மட்டும் அல்ல நடிப்பிலும் அவருடன் போட்டி போட்டு நடித்து திரையில் பிரமிக்க வைத்துள்ளார் சமுத்திரக்கனி.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, பழம்பெரும் நடிகைகளின் முக சாயலுடன்  அப்பாவித்தனமான நடிப்பு என்று தனது கதைக்கு உயிரோட்டத்துடன் நடிப்பின் மூலம் திரையில் அனைவரும் ரசித்து வைத்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பு இரண்டாம் பாதியில் அதிரடி நடிப்பு திரையில் ரசிக்க வைத்துள்ளது

டி கே எஸ் மகாதேவனின் மனைவியாக காயத்ரி, நாயகனின் மாமனராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் ஆகியோர் தனது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.




,

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme