Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பாம் திரை விமர்சனம்

Posted on September 13, 2025

அப்பாவி இளைஞனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பாம். இந்த படத்தை இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் காளி வெங்கட், அபிராமி, நாசர், சிங்கம்புலி, பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை பாணியில் சமூக நீதியை சொல்லி இருக்கும் பாம்.

பாம் படத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் மக்கள் இரண்டாகப் பிரிந்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் இவர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு தான். ஏற்றத்தாழ்வை விடாப்படியாக வைத்துக்கொண்டு இருவரும் அடித்துக் கொள்கிறார்கள். அந்த கிராமத்தை சேர்ந்த பகுத்தறிவாளர் ஒருவர், இந்த பிரிவினையை நீக்கி கிராமத்திற்கு நல்லது செய்ய விரும்புகிறார். ஆனால், அவருடைய ஆசை நிறைவேறுவதற்கு முன்பே அவர் இறந்து விடுகிறார்.

பின் இரவில் கிராமமே ஒன்றுகூடி அவருடைய உடலை அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. அப்போது அந்த உடல் பாம் போடுகிறது. அதாவது அந்த உடலில் இருந்து வாயு வருகிறது. கிராம மக்கள் எல்லோருக்குமே ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே அவர் இறந்துவிட்டாரா? இல்லையா? என்ற குழப்பமும் வருகிறது. அந்த இந்த சூழலில் தான் ஊர் பூசாரி, அவருக்கு சாமி வந்திருப்பதாக சொல்லி ஊர் மக்களை நம்ப வைக்கிறார்.

ஊர் திருவிழாவிற்கு இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் நிலையில் இந்த பூசாரி சொன்னதால் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் அர்ஜுன் தாஸ் வழக்கமான ஆக்சன் பாணியில் நடிக்காமல் ஒரு அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம்

  • தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்
  • *இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?
  • முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???
  • ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme