Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் – தெஸ்பியன் பிலிம்ஸ் இணையும் ஹைவான் படப்பிடிப்பு தொடக்கம்!!

Posted on August 23, 2025

அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ஹைவான் ஷூட்டிங் தொடங்கியது

கொச்சியில் படப்பிடிப்பு… அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ஹைவான் பணிகள் தொடக்கம்

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ஹைவான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹைவான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் தங்களது சமூக வலைத்தள பதிவுகளில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளனர்.

பிரியதர்ஷன் இயக்கும் ஹைவான் திரைப்படம் மட்டுமின்றி தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா அதிகம் எதிர்பார்க்கப்படும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதியின் ஜனநாயகன், யஷ் நடிக்கும் டாக்சிக் மற்றும் கேடி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்.

ஹைவான் திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கின்றனர்.

  • நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது
  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்
  • டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது
  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு
  • ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme