Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்து

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்து

Posted on September 9, 2019

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்து :

தீரும் நோய்கள் : மகோதரம் உடல் முழுவதும் வீக்கங் கொண்டு இருத்தல், சிறுநீரில் இரத்தம் வருதல், இரத்த வாந்தி, உப்பு நீர், மஞ்சள் காமாலை, நீடித்த கொக்கிப் புழு நோய் இவைகள் குணமடையும்.

தேவையான பொருட்கள் :

மண்டூரச் செந்தூரம் 50 கிராம்
சிலாசத்து பற்பம் 20 கிராம்
சிருங்கி பற்பம் 10 கிராம்
சங்கு பற்பம் 10 கிராம்
கொட்டாங்கச்சி கரித்தூள் 10 கிராம்

செய்முறை : மேற்சொன்ன 5 சரக்குகளையும் கலந்து, கல்வத்திலிட்டு உறவாகும்படி அரைத்து வைத்துக் கொள்ளவும். இன்னும்
தேவையான பொருட்கள் :

அதிமதுரம் 250 கிராம்
முள் சங்கன் வேர்ப்பட்டை 250 கிராம்

செய்முறை : இவைகளைத் தனித்தனியாக இடித்துத் தூள் செய்து சலித்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உறவாகும்படி நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உபயோகம் :

முன் சொன்ன பற்பத்தில் பட்டாணி பிரமாணம் எடுத்து, கீழ் சொன்ன சூரணத்தில் 1 அல்லது 2 கிராம் அளவு எடுத்து கலந்து அனுபானத்துடன் கொடுக்கவும். காலை மாலை தினம் இரண்டு வேளை தரவும்.

அனுபானம் :

பால், இளநீர், சாதம் வடித்த கஞ்சிநீர் இவற்றில் ஏதாவது ஒன்றில் மருந்து கொடுக்கவும். நோய் தீரும் வரை மருந்து சாப்பிட வேண்டும்.

பத்தியம் :

நோய்க்குத் தக்கபடி பத்தியம் வைக்கவும். புலால், புகையிலை, மதுபானம், உடலுறவு ஆகியவைகள் கண்டிப்பாக விலக்கவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme