Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அறுவகைச் சுவை என்ன என்ன

அறுவகைச் சுவை என்ன என்ன

Posted on September 9, 2019

அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம் : உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு.

கசப்பு : உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தி கூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பாகற்காய், சுண்டக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம்.

இனிப்பு : உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, கேரட், அரிசி, கோதுமை, கரும்பு.

புளிப்பு : இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்.

துவர்ப்பு : இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய்.

உப்பு : ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme