Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர்!

Posted on July 29, 2025

வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, “வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு ‘ஆவன் ஜாவன்’என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் பாடல். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இணைந்து ஒன்றாக நடனம் ஆடுகின்றனர். இந்த பாடலை பிரம்மஸ்திரா படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘கேசரியா’ பாடலை உருவாக்கிய பிரிதம் தாதா, அமிதாப் பட்டாசார்யா மற்றும் அரிஜித் சிங் ஆகியோர் இணைந்து வார் 2 படத்திற்கு பாடியுள்ளனர் .பிரிதம் தாதா,அமிதாப்,அரிஜித் மற்றும் ஹ்ரித்திக்,கியாரா என இவர்களின் உற்சாகம் முதன்முறையாக திரையில் ஒன்றாக இணைகிறது.

தாளமிக்க, காதலாக நிரம்பிய ‘ஆவன் ஜாவன்’ பாடலை இத்தாலியில் படமாக்கினோம். இந்த பாடலை படமாக்கியது வார் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற மிக இனிமையான நினைவுகளில் இதுவும் ஒன்றாகும்.இந்த வாரத்தில் அனைவரும் இந்த பாடலை கேட்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.”

வார் 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில், உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

  • கேப்டன் சினி கிரியேஷன்ஸ் ஒன்பதாவது படத்தை சமர்,தீராத விளையாட்டுப் பிள்ளை!!?
  • *“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா
  • ‘ஈவில் டெட் பர்ன்’ திரை விமர்சனம்
  • ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !
  • அப்பாவை இழந்த பின் செய்வதறியாதுதிகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே நடிகர் சாந்தனு!!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme