Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது” !!

Posted on July 27, 2025

சமுத்திரகனி நடிப்பில் தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் “ராகு கேது” !!

ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஆன்மீக திரைப்படம் “ ராகு கேது “ !!

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது.

ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் U சான்று வழங்கப்பட்டுள்ளது.

கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி K.P.அறிவானந்தம். இயக்குந்ர தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, S.ஆனந்த், v.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிட்டாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசை அமைத்துள்ளார்,
எடிட்டிங் பணிகளை B.லெனின் மேற்கொண்டுள்ளனர்.

இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8 தேதி வெளியாகிறது.

PRO. R. Mani Madhan

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme