Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நவீன தொழில்நுட்பத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ ; ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted on July 24, 2025

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆகஸ்ட் 22-ல் நவீன தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற ஒரு அற்புதமான பெயரையும் அவருக்கு பெற்று தந்தது..

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.. ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்..

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை வெளியிடும் ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம், கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தனர்.

கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

  • லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!
  • பனிவிழும் இரவு திரை விமர்சனம்
  • நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு
  • ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம் பிடித்த ‘கெவி’ திரைப்படம்: 400 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக வெள்ளகெவி கிராமத்திற்கு ரேஷன் கடை வந்ததை கொண்டாடும் படக்குழு!
  • Oscar-Contender Tamil Film GEVI Celebrates Historic Real-World Victory: Legendary Composer Deva Sings “Hill Anthem” Written by Vairamuthu ( ESAN SONALUM RATION KADIKUMA ).
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme