Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பீனிக்ஸ் திரைவிமர்சனம்

Posted on July 4, 2025

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ஃபீனிக்ஸ் . இயக்குனர் அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். மேலும் பீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் இந்த நடித்துள்ளார்கள். இன்று ஜூலை 4 ஆம் தேதி பீனிக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.

பீனிக்ஸ் படத்தில் முதல் பாதி முழுவதுமே சூர்யா சேதுபதிக்கு பெரிதாக வசனமே இல்லை. ஆனால், ஜெயில் சண்டை உள்ளிட்ட 3 சண்டைக் காட்சிகளை இயக்குநர் அனல் அரசு தரமாக இயக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே செம ஸ்ட்ராங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் சூர்யா சேதுபதி தனது புதிய ரசிகர்களுக்கு திரையில் ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைக் காட்சிகளுடன் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கான விருந்தை சூர்யா சேதுபதி தனது முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார்.

வடசென்னை பகுதியில் தனது குடும்பத்துடன் நாயகன் மற்றும் தனது அண்ணன் அம்மா உடன் வாழ்ந்து வருகிறார் இவர்களுக்கு அப்பா இல்லாததால் தனது அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர், கதையின் நாயகன் சூர்யா சேதுபதி மற்றும் அவரது அண்ணன் இருவரும் வடசென்னை பகுதி என்பதால் பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் பகுதி எம்எல்ஏ தனது மகனை வைத்து பாக்ஸிங் காம்பெடிஷன் நடத்துகிறார் அதில் நாயகன் சூர்யா சேதுபதி மற்றும் அவரது அண்ணன் இருவரும் கலந்து கொண்டு பாக்சிங் செய்கிறவர் அப்போது இறுதி சுற்றில் எம்எல்ஏ மகனும் சூர்யா சேதுபதியின் அண்ணனும் மோதுகின்றனர் இதில் நாயகனின் அண்ணன் வெற்றி பெறுகிறார் இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ ஆட்கள் நாயகனின் அண்ணனை கொன்று விடுகின்றனர் தன் அண்ணனை கொன்ற எம்எல்ஏ வை நாயகன் சூர்யா சேதுபதி கொன்றுவிட்டு சிறார் ஜெயிலுக்கு செல்கிறார் ஜெயிலுக்குள் வைத்து கொள்வதற்காக எம்எல்ஏவின் மனைவி வரலட்சுமி அடியாட்களை ஏற்பாடு செய்கிறார் இதனைத் தொடர்ந்து கதை நாயகன் சூர்யா சேதுபதி எம்எல்ஏ ஆட்களால் சூறையாடப்பட்டாரா அல்லது நாயகனிடம் அடியாட்கள் சிக்கி சிதறவிடப்பட்டாரா என்பது தான் மீதி கதை ஆக்சன் திருளராக ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுத்துள்ளார் அனல் அரசு.

  • ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !
  • அப்பாவை இழந்த பின் செய்வதறியாதுதிகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே நடிகர் சாந்தனு!!!
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme