Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*

Posted on June 25, 2025

*கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்*
*ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*
*கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்*
*ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*
*ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா  கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!*

*மும்பை, 25 ஜூன் 2025*: 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்? ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கும் துணை, காதல் மற்றும் தோழமை ஆகியவற்றைக் கொண்டாடும் ஃபேமிலி டிராமாவாக இது உருவாகி இருக்கிறது.

ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவில் இது படமாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றி வளர்ந்த ஸ்ரீரேணு திரிபாதி ஆண்மை, தோழமை மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு பற்றிய நீண்டகாலமாக தனது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்குகிறார். சமூக கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு தன்னை சுருக்கிக் கொள்ள மறுக்கும் ஒரு உற்சாகமான பெண்ணான மது தனக்கு வரும் வாழ்க்கைத் துணை காதலுடன் மட்டுமல்லாது தன் குணாதிசியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாள். இவர்கள் இருவரின் பாதையை உள்ளடக்கிய கதையாக ‘ஆப் ஜெய்சா கோய்’ உருவாகி இருக்கிறது. இது காதல் கதையாக மட்டுமல்லாமல், ஒரு பெண்ணின் சுயத்தை மீட்டெடுப்பது பற்றிய கதையாகவும் மாறுகிறது.

நடிகர் மாதவனை காதல் ஜானரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ’ஆப் ஜெய்சா கோய்’ திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இதில் பாத்திமா சனா ஷேக் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விவேக் சோனி (மீனாட்சி சுந்தரேஷ்வர்) இயக்கியுள்ள இந்தப் படத்தை தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஆயிஷா ராசா, மணீஷ் சவுத்ரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தனது கதாபாத்திரம் குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “நான் இதற்கு முன்பு நடித்த எந்தவொரு காதல் கதையையும் போல ‘ஆப் ஜெய்சா கோய்’ இல்லாமல் முழுக்க முழுக்க மனித மனங்களைச் சார்ந்தது. நான் நடித்த மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஸ்ரீரேணுவும் ஒருவர். கம்பேனியன்ஷிப்பிற்காக ஏங்கும் ஒருவர். ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று கூட தெரியாத உள்ளுக்குள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர். இந்தப் படம் அதிரடியாக இருக்காது. ஆனால் பொறுமையாகவும், மென்மையாகவும் பார்ப்பவர்களை ஆழமாகப் பாதிக்கும் வகையிலும் இருக்கும். வாழ்க்கையிலோ அல்லது காதலிலோ புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்களிடம் இது எவ்வாறு பேசுகிறது என்ற கருவால் நான் ஈர்க்கப்பட்டேன். ’ஆப் ஜெய்சா கோய்’ உங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானலும் வாழத் தொடங்கலாம் என்பதை அழுத்தமாக பேசும் கதை” என்றார்.

பாத்திமா சனா ஷேக் பகிர்ந்து கொண்டதாவது, “ஆப் ஜெய்சா கோயி’ படத்தில் நடித்திருப்பது உண்மையிலேயே எனக்கு பாக்கியம். நான் மாதவனின் மிகப்பெரிய ரசிகை! அவருடன் மது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நாம் பெரும்பாலும் வலிமை, நம்பிக்கையை ஆண்மையுடன் தொடர்புபடுத்துகிறோம், ஆனால், மது இந்த குணங்களை மென்மை மற்றும் பெண்மையுடன் வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் மூலம், நான் அன்பின் வெவ்வேறு வடிவங்களை உணர முடிந்தது. எனக்கும் அது தெரபியாக அமைந்தது. தனித்துவமான இயக்குநர் விவேக்குடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நேர்மையான இந்த கதையில் விவேக், மேடி, நெட்ஃபிலிக்ஸ் மற்றும் தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது எனது கரியரில் முக்கியமான தருணம்” என்றார்.

படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி ருச்சிகா கபூர் ஷேக், டைரக்டர் ஆஃப் ஒரிஜினல் ஃபிலிம்ஸ், நெட்ஃபிலிக்ஸ் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’ஆப் ஜெய்சா கோய்’ வீழ்ந்த நம்பிக்கைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மரபுகளுக்கு மத்தியில் துளிர்விடும் காதலைப் பற்றி பேசுகிறது. விவேக் சோனியின் வசீகரிக்கும் காட்சிகளுடன், ஆர். மாதவன், பாத்திமா சனா ஷேக், ஆயிஷா ராசா மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர். காதல் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் படத்தை தரத்துடன் தயாரித்துள்ளது” என்றார்.

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான ‘டெஸ்ட்’ படம் மூலம் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்த நடிகர் மாதவன் தற்போது காதல் ஜானருக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். ’ஆப் ஜெய்சா கோய்’ படத்தில் மென்மையான, உணர்ச்சிபூர்வமான என பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மனதைத் தொடும், மரபுகளை மீறும் ஒரு காதல் கதையை பார்க்கத் தயாராகுங்கள் என்பதையே தற்போது வெளியாகியுள்ள டிரைய்லர் உணர்த்துகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 11, 2025 அன்று ஸ்ட்ரீம் ஆகிறது.

*தொழில்நுட்பக் குழு:*
நடிகர்கள்: ஆர்.மாதவன், பாத்திமா சனா ஷேக்,.
தயாரிப்பு: தர்மாடிக் என்டர்டெயின்மென்ட்,
தயாரிப்பாளர்கள்: கரண் ஜோஹர், ஆதார் பூனவல்லா, அபூர்வா மேத்தா, சோமன் மிஸ்ரா,
இயக்குநர்: விவேக் சோனி

*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*
நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்று. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண உறுப்பினர்களைக் கொண்டு, பல்வேறு ஜானர் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்வையாளர்களுக்குக் கொடுத்து வருகிறது. உறுப்பினர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம், எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

*தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் பற்றி:*
ஃபிக்‌ஷன் மற்றும் நான்- ஃபிக்‌ஷன் கதைகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற இந்தியாவின் சிறந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தர்மா புரொடக்ஷன்ஸ் தற்போது நெட்ஃபிலிக்ஸில் படம் தயாரிப்பதன் மூலம் டிஜிட்டலிலும் அடியெடுத்து வைக்கிறது. சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த நிறுவனத்தை பன்முகத் திறமையாளரான இயக்குநர் மற்றும் கரண் ஜோஹர் நடத்தி வருகிறார்.

  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
  • Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri,
  • ”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!
  • Sumithra Devi — From Kannagi to Keerthi
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme