Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ப்ளடி பெக்கர் விமர்சனம்

Posted on November 4, 2024

சிவபாலன் முத்துக்குமார் இயக்கிய மற்றும் இயக்குனர் நெல்சன் தயாரித்த சமீபத்திய கவின் நடித்த கவின் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியாகியுள்ளது ‘பிளடி பெக்கர்’ திரைப்படம்.

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘ப்ளடி பெக்கர்’.
நடிகர்கள் :
கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கலை இயக்குநர் – மணிமொழியன் ராமதுரை
ஒளிப்பதிவு – சுஜித் சரங்
எடிட்டிங் – நிர்மல் கூட்டணி,
இசை – ஜென் மார்ட்டினின்
ஆடை வடிவமைப்பு – ஜெய் சக்தி
தயாரிப்பு – நெல்சன் திலீப்குமார்
நிர்வாக தயாரிப்பு – ராஜா ஸ்ரீதர்
இயக்கம் – சிவபாலன் முத்துக்குமார்
மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர்

விதவிமான தோற்றத்தில் மக்களிடம் பொய்யைச் சொல்லி பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கவின். அவன் ஜாக் (ரோஹித் டென்னிஸ்) என்ற சிறுவனுடன் வசிக்கிறார். ஜாக் போக்குவரத்து சிக்னல்களில் எழுதுபொருட்களை விற்று நேர்மையாக பணம் சம்பாதிக்க முயல்கிறான். இப்படிபட்ட சூழலில், ஒரு நாள் பிச்சைக்காரனிடம் இறந்த திரைப்பட நடிகர் சந்திரபோஸின் (ராதா ரவி) அரண்மனையில் அன்னதானம் வழங்கப்படுவதாக கூறி, அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவின். சாப்பிட்டு முடித்த கையுடன் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் கவினை கவர்ந்திழுக்க, மறுபுறம் அதிலிருக்கும் ஆபத்தும் அவரைச் சூழ்ந்து கொள்ள கவின் மாளிகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அது என்ன ஆபத்து? அந்த ஆபத்திலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவின் வித்தியாசமான பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் பொருத்தமானவராக இருந்தபோதும், அவரது நடிப்பு மிகைப் படுத்துவதாக இருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி மட்டும் பேயாக முக்கிய வேடத்தில் அப்பாவித்தனம் மற்றும் அடக்கமான நகைச்சுவையுடன் ஜாலி தருணங்களில் ஈர்க்கிறார்.

மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் என அனைத்து நடிகர்களும் ரொம்ப சுமாரான திரைக்கதைககு எரிச்சலூட்டும் நடிப்பை வழங்குகிறார்கள்.

  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்
  • “Before Akka, I didn’t know I could play a female gangster”: Keerthy Suresh on Becoming Bhavani
  • ‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!
  • பனிவிழும் இரவு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme