Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விநாயகர் சிலை ஊர்வலம்! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

Posted on September 7, 2019

விநாயகர் சிலை ஊர்வலம்! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை விநாயகர்கள் சிலை கரைக்கப்பட உள்ளதால் போக்குவரத்தில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாளை. (08.09.19) பெரும்பாலான விநாயகர் சிலைகள் நகரின் பல பகுதிகளிலிருந்து பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு கொண்டுவரப்படும்.
விநாயகர் சிலை ஊர்வலம்! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

இதையடுத்து ஈ.வே.ரா சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, ராதாகிருஷ்ணன் ஆகிய சாலைகள்

காலை 12 மணி மதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மிகுதியாக காணப்படும் என்பதால் தங்கள் பயணத்தை திட்டமிடுவாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திள்ளனர்.

மேலும் வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்லலாம்.

அடையாரிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள் ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஓய்ட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு அண்ணாசாலை வழியாக பாரிமுனை சென்றடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
  • Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme