Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

admin June 20, 2024

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணத்தையும் படக்குழு சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதை அடைய, படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘புஷ்பா2’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. படத்தின் புரோமோஷனாக வெளியான பாடல்கள் மற்றும் டீசர் என ஒவ்வொன்றும் இயற்கையாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சமீபத்தில் மாஸ் ஜாதரா டீசர், எனர்ஜிடிக்கான ‘புஷ்பா புஷ்பா’ டைட்டில் பாடல் மற்றும் ‘அங்காரன்’ காதல் பாடல் என இவை யூடியூப் பிளாட்ஃபார்மில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. நீண்ட காலத்திற்கு முதல் 10 இடங்களில் யூடியூபில் பிரபலமாக இருந்தன. மேலும், இந்தப் பாடல்கள் ரீல்ஸ் கண்டெண்ட்டாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. படம் முதலில் ஆகஸ்ட் 15, 2024 எனத் திட்டமிடப்பட்டு பின்பு வெளியீட்டுத் தேதி டிசம்பர் 6, 2024க்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை மேஸ்ட்ரோ சுகுமார் இயக்கியுள்ளார். படத்தில் ஐகான் ஸ்டார்அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Post navigation

Previous பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் கன்னியாகுமரியில் திறப்பு
Next ஹரா’ திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன்*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.