Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
'தி அக்காலி' திரை விமர்சனம்

‘தி அக்காலி’ திரை விமர்சனம்

Posted on May 31, 2024

அக்காலி என்பது பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்படும் வழக்குமொழி.இதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள்.

அக்காலி திரை கதையில்அமானுஸ்யம் , சுடுகாடு,சாத்தான்,நரபலி என்று ஏகப்பட்ட அம்சங்களை மையமாக வைத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தைக் திரையில் கொடுத்துள்ளார் .

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசாரணையில் இறங்குகிறார் காவல் அதிகாரி ஜெயகுமார்.அந்த விசாரணையில் பல்வேறு யூகிக்க முடியாத அதிர்ச்சி தகவல்களை அவர் சந்திக்கிறார்.

திரை கதை தொடக்கத்தில் உள்நாட்டு விவகார போலீசாக வரும் ஸ்வயம் சித்தா, ஒன்பது வருடத்திற்கு முன் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயக்குமார் எடுத்த அமானுஷ கேஸை பற்றி விசாரிக்கிறார் இதில் இருந்து திரை கதை தொடர்கிறது .

இந்த உலகில் தன்னம்பிக்கையின்மை, தோல்வி, மனவேதனை, இயலாமை ஆகிய பல காரணங்களால் சாவின் விளிம்பிற்கு சென்று உயிர் நீக்க முற்படுபவனை கடவுளின் எதிரியான சாத்தான் அரவணைத்துக் கொள்கிறார் என்றும், அதன் மூலமாக நிறைய நரபலிகள் நடைபெறுகின்றன என்றும் கூறி, இந்த கதை பல அமானுஷ்ய விஷயங்களில் செல்கிறது.

படத்தில் கிறித்துவ மதபோதகராக நடித்திருக்கும் நாசர் கதாபாத்திரத்தின் கனமும் அதில் அவருடைய நடிப்பும் பலம்.

இதுபோன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியம்.அதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரிமுர்பி.சில காட்சிகளில் ஒளியமைப்பு காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

அனிஷ்மோகன் பின்னணி இசையில் இயக்குநரின் எண்ணத்தை ஈடேற்ற முயன்றிருக்கிறார்.கலை இயக்குநர் தோட்டாதரணியின் பங்கு படத்துக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

முகமது ஆஷிப் ஹமீது எழுதி இயக்கியிருக்கிறார்.பாதுகாப்பான கதைகள் பல இருக்க இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து தன் தனித்துவத்தை நிறுவ நினைத்திருக்கிறார்.

  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme