Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ரேடியல் ரோட்டில்உள்ள காவேரி மருத்துவமனையில் சிறுநீரகக்குறைப்பு(RDN – Renal Denervation)என்ற சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.

ரேடியல் ரோட்டில்உள்ள காவேரி மருத்துவமனையில் சிறுநீரகக்குறைப்பு(RDN – Renal Denervation)என்ற சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.

admin May 30, 2024
ரேடியல் ரோட்டில்உள்ள காவேரி மருத்துவமனையில் சிறுநீரகக்குறைப்பு(RDN – Renal Denervation)என்ற சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.

ரேடியல் ரோட்டில்உள்ள காவேரி மருத்துவமனையில் சிறுநீரகக்குறைப்பு(RDN – Renal Denervation)என்ற சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.

70 வயதான முதியவருக்குசிறுநீரகக்குறைப்புசிகிச்சை மூலம் கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தத்திற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது

கடந்த ஆறு ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தத்தாலும்(High BP) அவதிப்பட்டு வந்த 70 வயது முதியவருக்கு, ரேடியல் ரோட்டில்உள்ள காவேரி மருத்துவமனையில் சிறுநீரகக்குறைப்பு(RDN – Renal Denervation)என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.

2019 முதல் உயர் இரத்த அழுத்தத்துடன்முதியவர்போராடி வந்தார். உயர் இரத்த அழுத்தத்திற்கு ஐந்து வெவ்வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மருந்தின் அளவை அதிகரித்தும் கூட, அவரது இரத்த அழுத்தம் 200/120mm Hg என்ற அளவிற்கு அதிகமாகவே இருந்தது. மேலும் அதனுடன் தொடர்புடைய, அவரது வாழ்க்கை தரத்தைப் பாதித்து வந்த அறிகுறிகளான தலைவலியும், படபடப்பும் அடிக்கடி தோன்றின.

இத்தகைய கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பல கடுமையான ஆபத்துகளைஏற்படுத்தவல்லது. அதற்கு தீர்வாக, தலைமை இருதயநோய் நிபுணரும் துறைத் தலைவருமான பேராசிரியர் மருத்துவர் அஜித் பிள்ளை, அதிநவீன மின்சார பண்பேற்றப்பட்ட சிறுநீரகக்குறைப்பு(Electrically Modulated RDN) சிகிச்சையைப் பரிந்துரைத்தார். நோயால் பாதிக்கப்பட்டவரின் சிறுநீரக நரம்பு கிளர்ச்சித்திறனைக் (nerve excitability) கட்டுப்படுத்த கதிரியக்க அதிர்வெண் நீக்கம்(Radiofrequency ablation) கேத் லேபில் (Cath lab)RDN செய்யப்பட்டது. இந்தநுண்துளை அறுவை சிகிச்சைஇரத்த அழுத்தத்தின் நீண்ட கால நிலைப்படுத்தலை அடைய நரம்பு செயற்பாட்டையும் மட்டுப்படுத்துகிறது.

சிகிச்சைக்குப் பிறகு, அவர் 48 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டார். உடல்நிலையைப் பொறுத்து, சிலர்24 மணி நேரத்திலும்டிஸ்சார்ஜ்செய்யப்ப்படலாம். ஒரு மாதத்திற்குப் பிறகு, இரத்த அழுத்தம் தொடர்ந்து சரியான 140/80mm Hgகட்டுப்பாட்டு அளவீடுகளிலேயே இருந்தது. அவர் முன்பு அனுபவித்த சிரமமான அறிகுறிகளில் இருந்து விடுபட்டு,BP மருந்துகளைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

“ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் ஹார்ட் இன்ஸ்டிடியூட், உயர் இரத்த அழுத்தத்தைகண்டறிதல்மற்றும்சிறப்பு சிகிச்சை முறையையும் கொண்டுள்ள மூன்றாம் நிலை சிறப்பு மையமாகும். இது RDN சிகிச்சைக்கான பரிந்துரை மையங்களிலும் ஒன்று. இதன்மூலமாகக் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் உள்ளவர்கள்பயன் பெறுவர்” என்றார் பேராசிரியரும்மருத்துவருமான அஜித் பிள்ளை.

சென்னைரேடியல்ரோட்டிலுள்ளகாவேரிமருத்துவமனை, ஒருமுன்னணிமருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பைகுடல், பெண்கள்மற்றும்குழந்தைநலம், எலும்பியல், மூட்டுபுனரமைப்பு, சிறுநீரகவியல்முதலியசிறப்புப்பிரிவுகளில், மேம்பட்டமருத்துவமும், அறுவைசிகிச்சைவசதியும்வழங்குகின்றது. பிரத்தியேகநிபுணர்கள்குழு, 50+ தீவிர சிகிச்சைபடுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ அறுவை சிகிச்சை அரங்குகள், மேம்பட்டகேத்லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல்நுண்ணோக்கி, உறுப்புமாற்றுசிகிச்சைவசதிகள், 24/7 டயாலிசிஸ்பிரிவுபோன்றஅதிநவீனவசதிகள்மூலம்உலகத்தரம்வாய்ந்தமருத்துவசேவையை, உலகம்முழுவதும்உள்ளநோயாளிகளுக்குவழங்குகின்றது.

Post navigation

Previous பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்” திரைப்படம் உலகமெங்கும் 11 அக்டோபர் 2024 வெளியாகிறது !!
Next Kauvery Hospital, Radial Road 70-Year-Old Patient Successfully Treated for Uncontrolled Hypertension Through Renal Denervation Therapy

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.