Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • *சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*

*சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*

admin May 28, 2024

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில், இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.

கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள், பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.

முன்னதாக புஜ்ஜியை அறிமுகப்படுத்தி வெளியான வீடியோ.

*சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து,  பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*
*சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!!*

Post navigation

Previous KKR Hospital Celebrates 22-Year Survival of Throat Cancer Patient Treated with Pioneering Surgery back in 2002
Next *தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்,

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.